ஏப்ரல் 3 ராசி பலன்

🕉️மேஷம்
ஏப்ரல் 03, 2021

கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் லாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.
பரணி : அமைதி வேண்டும்.
கிருத்திகை : லாபம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 03, 2021

மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நிதானத்துடன் கேட்பதன் மூலம் உங்களின் மீதான நற்பெயர்கள் மேம்படும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 03, 2021

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


🕉️கடகம்
ஏப்ரல் 03, 2021

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : தாமதங்கள் நீங்கும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 03, 2021

நீர்நிலைகள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த தொழில் தொடர்பான செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஆலோசனைகளும் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


🕉️கன்னி
ஏப்ரல் 03, 2021

கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாயின் மீது அன்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.


🕉️துலாம்
ஏப்ரல் 03, 2021

மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனை விற்பனையாளர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் மூலம் புதிய பயணங்களும், அனுபவ வாய்ப்புகளும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 03, 2021

தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டு மறையும். புதிய அதிகாரிகளிடம் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அலைச்சல்கள் மேம்படும்.
அனுஷம் : பணவரவுகள் கிடைக்கும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️தனுசு
ஏப்ரல் 03, 2021

எதிர்பாராத சில பொருட்களின் மூலம் தனவரவுகளும், மகிழ்ச்சியும் உண்டாகும். மருத்துவ பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மலைப்பிரதேச பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சக உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️மகரம்
ஏப்ரல் 03, 2021

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களில் கவனம் வேண்டும். திடீர் பணவரவு உண்டாகும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : பாக்கிகள் வசூலாகும்.

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

🕉️கும்பம்
ஏப்ரல் 03, 2021

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


🕉️மீனம்
ஏப்ரல் 03, 2021

கெளரவ பதவிகளால் மதிப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும்.
ரேவதி : இழுபறிகள் அகலும்.


About Author