ஜனவரி 09 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். சபை தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் காலதாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

மனதில் எதையும் சமாளிக்கும் திறமைகள் மேம்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் இலாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : திறமைகள் மேம்படும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️மிதுனம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். அரசு தொடர்பான பணிகளில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பின் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : வாக்குவாதங்கள் மறையும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.


🕉️கடகம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

உத்தியோகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு மறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சில நுணுக்கமான விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : விமர்சனங்கள் மறையும்.
பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


🕉️சிம்மம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

வாரிசுகளின் எதிர்காலம் தொடர்பான பணிகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மாற்றமான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : சோர்வு ஏற்படும்.


🕉️கன்னி
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

கடினமான காரியங்களையும் எளிமையான முறைகளின் மூலம் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : பயணங்கள் சாதகமாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.


🕉️துலாம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோகம் சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள். பெற்றோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : அனுபவ அறிவு வெளிப்படும்.
சுவாதி : வேறுபாடுகள் குறையும்.
விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


🕉️விருச்சகம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
கேட்டை : துரிதம் உண்டாகும்.


🕉️தனுசு
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

திட்டமிட்ட பணியை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

🕉️மகரம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

வெளியூர் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின் மூலம் மேன்மை ஏற்படும். குழப்பமான சிந்தனைகளிலிருந்து தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : புதிய முதலீடுகள் உண்டாகும்.
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.


🕉️கும்பம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

மனதில் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகளை குறைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் தொடர்பான முடிவுகளில் பிடிவாதப்போக்கை குறைத்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.
சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️மீனம்
ஜனவரி 09, 2021
மார்கழி 25 – சனி

அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். ஆன்மிக பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : தாமதங்கள் அகலும்.
ரேவதி : சிந்தனைகள் தோன்றும்.

#ராசிபலன் #2021

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.