நட்சத்திர பொது குணங்கள் உத்திரட்டாதி

இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன்

இன்று உத்திரட்டாதி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்.

நித்தம் நீராடி தமருளன் கோளன்நீதி பொன் பிறர்க்கு

உபகாரிவித்தை தாம்பூலப் பிரியன் சஞ்சாரன்விரிவுள காது மார்புடையன்புத்திமான் மாதர்க்கு இனியன்

சாதுரியன்பொய்யன் மற்றவர் தொழில் புரிவான்உத்தமர்க்கு

இனியன் வழக்கில் பலவான்உத்திரட்டாதி நாளானே


1. நீர் விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு

2. சுற்றம் / சொந்தங்கள் நிறைந்தவர்

3. பிறருக்கு உதவிடுவதில் சிறப்பான கவனமும் அக்கறையும் இருக்கும்

4. தாம்பூலப் பிரியர்

5. பயணங்களில் ஆர்வம் உள்ளவர்

6. பரந்த மார்பு

7. காதுகள் அகலமானவை

8. அறிவுசார்ந்த விஷயங்கள் பேசுவதில் சமர்த்தர்

9. உத்திரட்டாதி ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவர்

10 பொய் பேசும் சந்தர்ப்பம் வந்தால் யோசிப்பார். அதிலிருந்து எப்படி விலகுவது என்பதையே கவனிப்பார்

11. பிறருடைய வேலைகளை அவர்களின் மெச்சத் தகுந்த திருப்திக்கு செய்து முடிப்பார்

12. வழக்கு பேசுவதில் சமர்த்தர்

பேசும் திறம், சுகம், சந்ததி, பகைவர்களை வெற்றி கொள்ளும் திறமை ஆகியவை மிகுதியாகக் கொண்டவன் என்கிறது பிருஹத் ஜாதகம்

பகை வெற்றி, திடமான நியாயத்தைப் பேசுபவன் என்கிறது யவன ஜாதகம்


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம் பூரட்டாதி 

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.