இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன்
இன்று ரேவதி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்
மெல்லியர் இடத்தில் சாலவே பிரியன் மிகு செல்வம் பாதிநாள்
விளங்கும்நல்லவன் பிறர்சொல் கேட்பன் நல்குணவான்நயன
சிங்கார சீமானாம்சொல்லுரையில் சாதுரியன் அந்தணரைத்
தொழும்பத்தியுள்ள புத்தியினான்இல்லையென்று உரையான் பழிக்கிடங்கொடாதஇயல்பினான் ரேவதியானே
1. பெண்களிடத்தில் அதிகம் மோகம் கொண்டவர்கள் (ஆண்கள் எனில்)
2. ஆயுளில் பெரும் பகுதி நல்ல நிலையில் கழியும்
3. பிறரின் சொல் பேச்சு கேட்பவர்கள்
4. அழகான கண்கள்
5. சாந்தமான சுபாவம்
6. வாக்கு சாதுரியம் அதிலும் ஒரே
விஷயத்தை இரண்டு தரப்பிலும் பேசும் சாமர்த்தியம்
7. குருவை வணங்கும் பழக்கம் உண்டு
8. கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லமாட்டார்
9. பொல்லாங்கிற்கு இடம் கொடாத வகையில் நடக்க வேண்டும் என முயற்சி செய்வார்கள்
வெளியூரில் அலைந்து திரிவான். மலைக் கோட்டைகளை வெல்வான் என்கிறது யவன ஜாதகம் நூல்
9840656627