நவம்பர் 20 ராசி பலன்

மேஷம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

உறவினர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : முன்னேற்றமான நாள்.

கிருத்திகை : தாமதங்கள் அகலும்.
—————————————
*🕉️ரிஷபம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வாக்குவன்மையால் பாராட்டுகளை பெறுவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு குருமார்களின் ஆலோசனைகள் புதிய அனுபவத்தை தரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.

ரோகிணி : அங்கீகாரம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : புதிய அனுபவம் உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனம் வேண்டும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : தலையீடுகளை தவிர்க்கவும்.

புனர்பூசம் : அமைதி வேண்டும்.
—————————————
*🕉️கடகம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் நிம்மதியான சூழ்நிலைகள் அமையும். கூட்டாளிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பூசம் : நிம்மதியான நாள்.

ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
*🕉️சிம்மம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை அகலும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாகனப் பயணங்களின்போது சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : விழிப்புணர்வு வேண்டும்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : தாமதங்கள் அகலும்.
—————————————
*🕉️கன்னி*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றமும், புதுவிதமான சிந்தனைகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.

சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

தொழிலில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் புத்திக்கூர்மையின் மூலம் இலாபம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். இறைவழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் அகலும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.

விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.
—————————————
*🕉️விருச்சகம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பாகப்பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : தாமதம் உண்டாகும்.

அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கேட்டை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————
*🕉️தனுசு*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் கோபமின்றி நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். மனதில் உள்ள எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பேசும் பொழுது சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : பொருள் வரவு உண்டாகும்.

பூராடம் : நம்பிக்கை மேம்படும்.

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

எந்தவொரு செயல்களையும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெற்று மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகலாம். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
—————————————
*🕉️மீனம்*

நவம்பர் 20, 2020

கார்த்திகை 05 – வெள்ளி

செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளிகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.

ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.