ப்லவ வருடம் தை மாத ராசிப லன்கள் (14.01.2022 முதல்13.02.2022 வரை)
வருகிற 14.01.2022 பிற்பகல் 02:29:29 மணிக்கு சூரியபகவான் தனூர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மகர ராசியில் 13.02.2022 இரவு 03:27:26 மணி வரை சஞ்சரிக்கிறார்.
இது லஹரி அயனாம்ஸத்தை ஒட்டி கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது.
வாக்கியப்படி 14.01.2022 மாலை 05.18 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.
ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் லஹரி அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்தல் சரியாக வரும்.
நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்
இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.
பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை: குரு,சுக்ரன், சனி இவர்களின் சஞ்சாரம் மற்ற கிரஹ நிலையை கொண்டு மாதம் முழுவதும் சில சங்கடங்களை கொடுக்கும். ஆசிரியர் குரு, பெரியோர்கள் சபையில் அவமதிக்கப்படலாம், அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படலாம். அதே நேரம் விளைச்சல், விவசாயம், கால்நடைகள் விருத்தி அடையும். தவறான ஆலோசனைகள் சட்ட சிக்கல்களை கொடுத்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி, மக்கள் அவதி, அரசர்கள் (மாநிலங்கள்) ஒருவருக்கு ஒருவர் சண்டை கெடுமதியாளர்களின் கை ஓங்குதல் போன்றவை இருக்கும். தெய்வ பக்தி மக்களிடம் கூடும். மேலும் தங்கம் எண்ணை, ஆடம்பர வஸ்துகளின் விலை குறைவும், அதனால் மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும். பொதுவில் இந்த மாதம் நாட்டுக்கு வெகு சுமார் மாதம். கவனம் தேவை.
மேஷம் (அஸ்வினி 4 பாதம், பரணி 4 பாதம், கார்த்திகை 1பாதம் முடிய) :
உங்கள் ராசிநாதர் செவ்வாய் மாதம் பிறக்கும் போது உண்டான ரிஷப லக்னத்துக்கு 7ல் இருக்கிறார். உங்கள் பிறப்பு ஜாதகத்திலும் செவ்வாய் வலுவாக இருந்தால் மிக சிறந்த பலன்களை தற்போது அடைவீர்கள். காரணம் சூரியன், குரு,சந்திரன், புதன் இவர்களின் சஞ்சாரம் பொருளாதாரத்தை மேம்படுத்தும். ஜீவன வகையில் ஏற்றம் இருக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலை பதவி, சம்பள உயர்வு, அதனால் இல்லத்தேவைகள் பூர்த்தியாகுதல், சொந்த தொழிலில் வருமானம் பெருகுதல் போன்றவையும், ஆடை ஆபரண சேர்க்கை, தாமதமாகி கொண்டிருந்த திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் இந்த மாதம் ஆரம்பிக்கும் நிறைவேறும் வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் சிலருக்கு எதிர்பாராமல் நீண்ட கால திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டாகும். மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரம் இதை உறுதி செய்கிறது. 5ம் அதிபதி குருவின் சம்பந்தம் பெறுவதாலும், 5ம் இடம் குருவின் பார்வை பெறுவதாலும் சிலருக்கு எதிர்பார்த்த புத்திர பாக்கியம் உண்டாகும். விவசாயம் செய்வோர் நல்ல வருமானத்தை காண்பர் கால் நடையால் லாபம் உண்டாகும். குடும்ப அங்கத்தினர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு மருத்துவ செலவுகள் குறைய ஆரம்பிக்கும். கடந்த காலங்களில் வழக்குகள் உறவில் விரிசல் என்று இருந்தால் அது தீரும் நிலை ஏற்படும். பொதுவில் இந்த மாதம் அதிக மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாக அமைகிறது. மேலும் பெரும்பாலும் கிரஹ நிலைகள் சாதகம் அதனால் கெடுபலன்கள் குறைய வாய்ப்புகள் உண்டு.வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். மத்திய பலனை கொடுக்க கூடிய கிரஹங்கள் உங்களுக்கு கெடுதல் செய்யாது.
அஸ்வினி சந்திராஷ்டமம்: 27.01.2022 அதிகாலை 04.35 மணி முதல் 28.01.2022 அதிகாலை 03.40 மணி வரை
பரணி சந்திராஷ்டமம்: 28.01.2022 அதிகாலை 03.40 மணி முதல் 29.01.2022 நள்ளிரவு 02.01 மணி வரை
கார்த்திகை 1ம் பாதம் சந்திராஷ்டமம்: 29.01.2022 நள்ளிரவு 02.01 மணி முதல் 30.01.2022 இரவு 00.24 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : முருகன் வழிபாடு, வள்ளி தெய்வயானை சமேதராய் எழுந்தருளியிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி ஸ்லோகங்களை சொல்லி வழிபடுவது, தான தர்மங்களை செய்வது நலம் உண்டாக்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி 4 பாதம், மிருகசீர்டம் 1,2 பாதங்கள் முடிய):
உங்கள் ராசிநாதர் சுக்ரன் 30.01.22 வரை 8ல் வக்ரியாக இருக்கிறார். தெய்வ அனுகூலம் உண்டாகும். பத்தில் குரு பதவி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பர் குரு உங்களுக்கு அனுகூலமான போக்கிருப்பதால் உத்தியோகத்தில் நல்ல நிலை விரும்பிய பதவி, வருமானம் கிடைக்கும். சந்திரனின் சஞ்சாரங்களும், செவ்வாயின் தனுர் ராசி சேர்க்கையும் பொருளாதாரத்தில் ஏற்றம் தரும். ஜென்ம ராகு 12ம் இடம் நோக்கி நகர்வது சுப விரயங்களை தரும். கேது வியாதிகளை குறைக்கும் பிள்ளைகள் மூலம் உண்டான கசப்புகளை நீக்கும். மேலும் புதன் & சூரியன் கல்வியில் உயர்ந்த நிலை அரசாங்க அனுகூலம் இவற்றை தரும் சொந்த தொழில் செய்வோருக்கு எளிதில் வங்கி கடன் அரசு உதவிகள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். கடந்த கால கடன்கள் அடைய வழி பிறக்கும். அதே நேரம் பாக்யாதிபதி சனியின் 6ம் இடம் பார்வை புதன் சஞ்சாரம் மருத்துவ செலவுகள், பெற்றோர் வகையில் மருத்துவ செல்வுகள், மற்றும் வழக்கு போன்ற செலவுகளும் இருக்கும். நிதானம் பொறுமை அவசியம் வீன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது பொதுவில் இந்த மாதம் நன்மை இருந்தாலும் செலவுகள் மன கசப்பும் இருக்கும். முக்கியமாக கலை, அரசியல் விவசாயம், கல்வி போன்ற துறைகளில் இருப்போர்கள் மிக கவனமுடன் செயல் படுவது நன்மை தரும். உறவுகளிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. முக்கியமாக சொத்து வீடு விற்பனை விஷயங்கள், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம்.
கார்த்திகை 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 29.01.2022 நள்ளிரவு 02.01 மணி முதல் 30.01.2022 இரவு 00.24 மணி வரை
ரோஹிணி சந்திராஷ்டமம்: 30.01.2022 இரவு 00.24 மணி முதல் 30.01.2022 இரவு 10.53 மணி வரை
மிருகசீரிடம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம்: 30.01.2022 இரவு 10.53 மணி முதல் 31.01.2022 இரவு 09.30 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருவேற்காடு அம்மன், எல்லை தேவதைகள் கோயிலில் விளக்கேற்றி வழிபடுதல், கோயில் உழவார பணி, அன்னதானம், வஸ்திர தானம் இவற்றை செய்வது நலம் தரும்.
மிதுனம் (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதம், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):
உங்கள் ராசி நாதர் புதன் எட்டாம் இடத்தில் வக்ரியாக பிப்ரவரி நாலாம் தேதி வரை இருக்கிறார் பொதுவாக எட்டாம் இடத்தில் ராசியாதிபதி லக்னாதிபதி மறைந்தாள் பலர் இருக்காது ஆனால் எட்டாம் இடத்தில் இருப்பது அனுகூலத்தை தரும் தற்போது வகையாக இருப்பதால் பெரிய பலன்கள் இல்லை ஆனால் சூரியன் சனி ஓரளவு நன்மை தருகிறது அதேபோல் அஷ்டம சனி கஷ்டத்தை கொடுப்போம் என்பதும் பொது விதி எல்லோருக்கும் அப்படி இல்லை இந்த தனியானது சந்திரனுடைய நட்சத்திர கால்களில் இருப்பது நன்மை அதிகம் உண்டாகும் பொருளாதாரத்தில் நல்ல நிலையை தரும் காரணம் 10-ஆம் இடத்தை சனி பார்ப்பது அதேபோல் ஒன்பதில் இருந்து ராசியை பார்க்கும் குரு இல்லத்தில் மகிமை மகிழ்வை உண்டாக்கும் நிகழ்ச்சியை செய்வார் பன்னிரண்டில் இருக்கும் ராகு 11 இடம் நோக்கி நகர்வதால் இரட்டை வருவாய் லாபம் உறவுகளால் மகிழ்ச்சி என்று தருவார் பொதுவாக ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சுக்கிரன் திருமணம் குழந்தை பாக்கியம் திடீர் பண வரவுகள் போன்றவற்றை செய்வதால் இந்த மாதம் நன்மைகள் அதிகம் அதேநேரம் ஏழில் செவ்வாய் மற்றும் ஐந்தாமிடம் நோக்கும் கேது சஞ்சாரங்கள் இல்லத்தில் மருத்துவ செலவுகள், கணவர் மனைவிக்கு இடையே ஒற்றுமை இன்மை, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் வகையில் அதிக கவலை ஏற்படுதல் முயற்சிகளில் பின்னடைவு, திருமணம் முதலான ஏற்பாடுகளில் தேக்கம் ஏற்படுதல் போன்றவையும் இருக்கும். நிதானமாக பொறுமையாக நடந்து கொள்வது நன்மை தரும். ஒரு பக்கம் பண வரவு இருந்தாலும் உத்தியோகம், சொந்த தொழில் ஜீவன வகையில் முன்னேற்றம் இருந்தாலும் உறவுகள் நட்புகள் போன்ற வகையில் மன கசப்பு விரோதம் ஏற்படும். இந்த மாதம் சுமார்.
மிருகசீரிடம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 30.01.2022 இரவு 10.53 மணி முதல் 31.01.2022 இரவு 09.30 மணி வரை
திருவாதிரை சந்திராஷ்டமம்: 31.01.2022 இரவு 09.30 மணி முதல் 01.02.2022 இரவு 08.23 மணி வரை
புனர்பூசம் 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம்: 01.02.2022 இரவு 08.23 மணி முதல் 02.01.2022 இரவு 07.34 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :. பிள்ளையார் ஐய்யப்பன் கோயிலில் விளக்கேற்றி ஸ்லோகம் சொல்வது, மற்றும் முடிந்த அளவு தான தருமம் செய்வதும் நன்மைகளை தரும்.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4 பாதங்கள்):
உங்கள் ராசிநாதர் சந்திரன் மாதம் பிறக்கும் போது லாபத்தில் நல்ல நிலையில் இருப்பதும், குடும்பஸ்தானாதிபதி 7ல் இருந்து ராசியை பார்ப்பதும், ராகு 10ம் இடத்க்கு உண்டான பலனை தருவதும் மற்ற கிரஹங்களில் சுக்ரன் ஓரளவு நல்ல பலன் தருவதாலும் இந்த மாதம் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும், உழைப்பில் முன்னேற்றம் இருக்கும். மேலும் தாமதம் ஆகி கொண்டிருந்த திருமணம், வீடு வாகன யோகங்கள் அமைவதற்கு வாய்ப்பு அதிகம். எட்டில் குரு, 7ல் சனி, 6ல் செவ்வாய், 12க்குடைய புதன் வக்ரி இப்படி இருக்கும் நிலை பெரிய கஷ்டத்தை தராது எனினும் மன சஞ்சலத்தை உண்டாக்கும். எதையும் தக்க ஆலோசனை பெற்று யோசித்து செய்வது நலம் பயக்கும். பெரிய அளவில் இந்த மாதம் கெடுதல் இல்லை, அதேநேரம் இல்லத்தில் விட்டு கொடுத்து செல்வது, உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அனுசரித்து செல்வது அதிக நன்மை தரும். குரு 2ம் இட பார்வை குடும்பத்தில் புது வரவு, வீடு பராமரிப்பு வேலைகளில் முன்னேற்றம், 4ம் இடம் பார்வை தாயார் வாகன, வீடு வகையில் யோகத்தை தரும். ராகுவால் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் இரட்டை வருமானம் உண்டாகும். தாயார் வழியில் மருத்துவ செலவுகளை கேது குறைத்து விடுகிறார். பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம் இருந்தாலும் மன சஞ்சலமும் இருப்பது ஒருவித பயத்தை கொடுத்து கொண்டிருக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம் சந்திராஷ்டமம்: 01.02.2022 இரவு 08.23 மணி முதல் 02.01.2022 இரவு 07.34 மணி வரை
பூசம் சந்திராஷ்டமம்: 02.01.2022 இரவு 07.34 மணி முதல் 03.02.2022 இரவு 07.06 மணி வரை
ஆயில்யம் சந்திராஷ்டமம்: 03.02.2022 இரவு 07.06 மணி முதல் 04.02.2022 இரவு 07.11 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : காஞ்சி காமாட்சி அம்மனை மனதில் தியானித்து அருகில் உள்ள கோயிலில் தாயாருக்கு விளக்கு ஏற்றுவது, புஷ்பம் மாலை வாங்கி தருவ்து போன்றவையும் அன்னதானம் செய்வதும் அதிக நன்மை தரும்.
சிம்மம் (மகம் 4பாதம், பூரம் 4பாதம், உத்திரம் 1ம் பாதம் முடிய):
ராசிநாதன் சூரியன் 6வீட்டில். பொதுவாக சூரியனுக்கு சனி பகை என நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது ஆனால் ஒவ்வொரு சமயமும் மாறும் இங்கு இந்த மாதம் மகர ராசியில் இருக்கும் சூரியன் உங்களுக்கு அதிக நன்மை செய்கிறார். சூரியனை கண்ட பனி போல துன்பங்கள் விலகி விடும். இதுவரை தாமதமாகி கொண்டிருந்த முயற்சிகள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். சனி பகவான் எலும்பு, கால் வலி, இருதயம், சிறுநீரக பாதிப்பு என்று கொஞ்சம் மருத்துவ செலவை வைப்பார். 4ல் இருக்கும் கேது பகவான் 3ம் இட பலனை தரும் அதனால் பொருளாதாரம் ஏற்றம் பெறும். மேலும் சுக்ரன், ராசியை பார்க்கும் குரு இவர்களால் ஆடை ஆபரண சேற்க்கை, பக்தி சுற்றுலா, விருந்து கேளிக்கைகள், உறவுகளால் மகிச்சி, கணவன் மனைவி ஒற்றுமை என்று தரும், போட்ட திட்டங்கள் கைகூடுவதால் தேவைகள் பூர்த்தி ஆவதால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், அதே நேரம், 5ல் செவ்வாய், 9ம் இட பலனை தரும் ராகு இவர்கள் மருத்துவ செலவு பெற்றோர்கள் வகையிலும், குழந்தைகளுக்கு அடிபடுதல் உடல் உபாதைகள் என்று செலவையும், மன வருத்தமும் தரும். கொஞ்சம் குழப்பம் இருந்து கொண்டிருக்கும். இருந்தாலும் இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும். பொதுவாக பெரும்பாலான கிரஹங்கள் சாதகம் என்பதால் ஜீவன வகையில், உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் வருமானம் அதிகரித்தல், வங்கி அரசு வகையில் உதவி, இருந்த கடன்கள் அடைய வழி உண்டாகும். கலை, விவசாயம், நிர்வாகம், பணம் புழங்கும் இடம் இங்கெல்லாம் வேலை செய்வோர் சொந்த தொழில் செய்வோர் இவர்களுக்கு இந்த மாதம் அதிக நன்மை உண்டாகும்.
மகம் சந்திராஷ்டமம் : 04.02.2022 இரவு 07.11 மணி முதல் 05.02.2022 இரவு 07.40 மணி வரை
பூரம் சந்திராஷ்டமம் : 05.02.2022 இரவு 07.40 மணி முதல் 06.02.2022 இரவு 08.39 மணி வரை
உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 06.02.2022 இரவு 08.39 மணி 07.02.2022 இரவு 10.08 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : தேனினும் இனிய மென்மொழியாள் உடனுறை பதஞ்சலி மனோகர ஸ்வாமியை (திருவாரூர்) வழிபடுவது, சிவன் கோயிலில் அபிஷேகத்துக்கு பால் தருவது நந்தி தரிசனம் ப்ரதோஷ வேளையில் செய்வது நன்மை தரும். ஏழை எளியோருக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்
கன்னி :(உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):
உங்கள் ராசிநாதர் 5ல் வக்ரியாக பிப்ரவரி 4ம் தேதி வரை, சூரியன் சனியுடன் இருந்தாலும் அதிக நன்மை செய்பவர்கள் 4ல் இருக்கும் சுக்ரன் செவ்வாய், 3ல் கேது 2க்குண்டான பலனை செய்வது மற்றும் குருவின் 5ம் பார்வை 10ம் இடம் நோக்கி, சூரியன் 5ல் ஓரளவு நன்மை என்று இந்த மாதம் நல்ல பலன்கள் சற்று அதிக மாக கடந்த காலங்களை விட நன்றாக இருக்கிறது. வீண் மருத்துவ செலவுகள் உறவுகளால் மன வருத்தம் பொருளாதாராம் விரயமாக போவது என்று இதுவரை இருந்து வந்த நிலை மாறி பொருளாதார வகையில் ஏற்றம், செலவுகள் குறைந்து சேமிப்பு உண்டாகுதல், விருந்து கேளிக்கை, ஆன்மீக சுற்றுலா, ஆடை ஆபரண சேர்க்கை, சிலருக்கு வீடு வாகனம் புதிதாக அமைதல் எதிர்பார்த்த திருமண வாய்ப்புகள் தேடிவருதல், இல்லத்தில் புது வரவு, விவசாயம், புத்தக விற்பனை, கல்வி, ரானுவம், சமையல் ஓட்டல், மண் தொழில் செய்வோர் என்று இவர்களுக்கு மிகுந்த ஏற்றமும், மற்றவர்களுக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தை கொண்டு நல்ல பலனும் உண்டாகும். மருத்துவ துறையில் இருப்போர் தங்களையும் அக்கறையுடன் பார்த்து கொள்ளல் வேண்டும், உடல் நல பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு. மேலும் 12க்குடைய சூரியன் 5ல் பகை வீட்டில் என சொல்லப்பட்டாலும் இங்கு கெடுதல் செய்யாமல் வியாதிகள் கடன் தொலை எதிர்ப்புகள் இவற்றை குறைக்கும் செயலை செய்கிறார். 6க்குடையவர் சனி 5ல் ஆட்சியாக லாபத்தை பார்த்து செயல்களில் வெற்றியையும், பிள்ளைகளால் பெருமையையும் தருகிறார். பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் உண்டு.
உத்திரம் 2,3,4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 06.02.2022 இரவு 08.39 மணி 07.02.2022 இரவு 10.08 மணி வரை
ஹஸ்தம்: சந்திராஷ்டமம் : 07.02.2022 இரவு 10.08 மணி முதல் 08.02.2022 இரவு 12.02 மணி வரை
சித்திரை 1,2 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 08.02.2022 இரவு 12.02 மணி முதல், 09.02.2022 இரவு 02.19 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருமுட்டம் ஸ்ரீஆதிவராக பெருமாள், அருகில் உள்ள கோயிலில் வராக மூர்த்திக்கு அபிஷேகம் செய்தல் ஸ்ரீபூவராக ஸ்வாமி ஸ்லோகம் சொல்லுதல், கோயில் கைங்கர்யம், அன்னதானம், கல்வி தானம் போன்றவை செய்தல் மிகுந்த நன்மை தரும்.
துலாம்:( சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):
உங்கள் ராசிநாதர் சுக்ரன் 3ல் வக்ரியாக மாதம் முழுவதும், அடப்போப்பா என்ற வகையில் பலன் தந்தாலும், நாங்க இருக்கோம்னு 2க்குடைய செவ்வாய் மன திட ஸ்தானம் 3ல், மற்றும் ராசியை பார்க்கும் குரு, சனி, 7க்குடைய பலனை முன்பே தரும் ராகு இவர்கள் பலனை அள்ளி தருகின்றனர். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நீண்டகாலமாக பிள்ளை பாக்கியத்துக்கு ஏங்குவோர்க்கு குழந்தை கருவில் உண்டாக வாய்ப்பு மேலும் பொருளாதாரம் பலமாக இருக்கு. சிலருக்கு தந்தை வழி சொத்துக்கள் அல்லது தந்தை மூலம் நன்மை என கிடைக்கும். போட்ட திட்டங்கள் இந்த மாதம் செயல்படும் அதன் மூலம் வருவாய் பெருகி இல்லத்தேவைகள் பூர்த்தியாகும், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். லாபாதிபதி சூரியன் 4ல் வலுவாய் தாயார் வழியிலும் நன்மை உண்டு. உத்தியோகம் பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் இவற்றை தரும். சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும். மருத்துவம், ரானுவம், பத்திரிகை, மீடியா, சினிமா, பிரிண்டிங்க், கோயில் ஊழியர்கள் அர்ச்சகர்கள் தச்சு நகை உற்பத்தி அழகு நிலயம் போன்ற தொழில்களில் இருப்போர், வேலை செய்வோர் இவர்களுக்கு இந்த மாதம் ஏற்றமாக இருக்கும். மற்றவர்களுக்கும் அவரவர் ஜாதகத்தை ஒட்டி நன்றாக இருக்கும். பொதுவில் இந்த மாதம் நன்றாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். கடந்த கால வழக்குகள், சண்டைகள் தீர்வுக்கு வரும்.
சித்திரை 3,4 பாதங்கள்: சந்திராஷ்டமம் : 08.02.2022 இரவு 12.02 மணி முதல், 09.02.2022 இரவு 02.19 மணி வரை
ஸ்வாதி 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 14.01.2022 இரவு 09.34 மணி வரை & 09.02.2022 இரவு 02.19 மணி முதல் 10.02.2022 அதிகாலை 04.47 மணி வரை
விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 14.01.2022 இரவு 09.34 மணி முதல், 16.01.2022 இரவு 00.08 மணி வரை & 11.02.2022 அதிகாலை 04.47 மணி முதல் 12.02.2022 காலை 07.22 மணி வரை.
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பெற்றோர் முன்னோர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு நன்மை தரும். முடிந்த அளவு தானம் செய்யுங்கள் பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்படி நடப்பதும் நன்மை உண்டாக்கும்.
விருச்சிகம்:( விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4பாதம், கேட்டை 4 பாதங்கள் முடிய):
ராசிநாதர் செவ்வாய் இரண்டில் சுக்ரனுடன், மூன்றில் சூரியன் வலுவாய் மற்றும் சனி ஆட்சி, 6ம் இடத்து பலனை தரும் ராகு என்று இவர்கள் அனைத்து நல்ல பலன்களை தருகிறார்கள், சுக்ரனால் பொருளாதாரம் கூடும், சூரியன் மன திடம் முயற்சிகளில் வெற்றி எதிர்பார்ப்புகள் ஈடேறுதல், 12ம் இடம் பலனை தரும் கேது கடந்த கால வழக்கு, எதிரி தொல்லை, கடன் தொல்லை இவற்றை இல்லாமல் செய்கிறது. உத்தியோகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வுகள், விரும்பிய இடமாற்றம் இவை உண்டாகும், சிலருக்கு நீண்ட நாளுக்கு பின் நல்ல வேலை கிடைக்கும், சொந்த தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் மறைய துவங்கி புதிய தொழில் விஸ்தாரணம், வங்கி கடன் சலுகைகள் இவை கிடைக்கும். மனதில் உற்சாகம், இல்லத்தேவைகள் பூர்த்தி ஆகுதல், தாமதம் ஆன திருமண முயற்சிகள் கைகூடுதல், வீடு விற்பது வாங்குவது இருந்துவந்த சிக்கல் தீரும். இப்படி பல பிரச்சனைகள் தீர ஆரம்பிக்கும் இனிவரும் சுப கிருது வருடம் சுபமாக மாறுவதற்கான மன உளைச்சல் நீங்கி குடும்பத்தில் குதூகலம் உண்டாக இந்த மாத கிரஹ நிலைகள் சாதகமாக இருக்கிறது. 3ல் புதன் வக்ரியாக இருந்தாலும் கல்வி போன்ற விஷயங்களில் அதிக நன்மை உண்டாக செய்கிறார். குரு சுக ஸ்தானத்தில் இருந்தாலும் பார்வையால் நன்மை செய்கிறார் அவரின் 8ம் இட பார்வை தெய்வ அனுகூலத்தை அதிகம் தருகிறது. நல்ல மாதம்
விசாகம் 4ம் பாதம் : சந்திராஷ்டமம் : 14.01.2022 இரவு 09.34 மணி முதல், 16.01.2022 இரவு 00.08 மணி வரை & 11.02.2022 அதிகாலை 04.47 மணி முதல் 12.02.2022 காலை 07.22 மணி வரை.
அனுஷம் 4பாதங்கள் : சந்திராஷ்டமம் : 16.01.2022 இரவு 00.28 மணி முதல் 17.01.2022 இரவு 02.36 மணி வரை
கேட்டை 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 17.01.2022 இரவு 02.36 மணி முதல் 18.01.2022 அதிகாலை 04.50 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஸ்வாமி மலை முருகன், அம்பாள் வழிபாடு நலம் தரும். இதுவரை துன்பத்தால் தெய்வ நம்பிக்கை அற்று இருந்தால் இந்த வழிபாடுகள் இனி நலத்தை தரும் என்பது உறுதி. முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்.
தனூர்(மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):
ராசிநாதர் குரு 3ல் தைரிய ஸ்தானம், குடும்ப ஸ்தானம் 2ல் சூரியன் சனி புதன் சஞ்சாரம் ராசியில் சுக்ரன்,செவ்வாய் வெகு சுமாரான பலன் என்று தருவர் . ஆனால் வக்ர சுக்ரனும், வக்ர புதனும் ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வம், அவசர படுதல், முன் யோசனை இன்றி செயல்படுவதும் பலவித சிக்கலை கொடுக்கும். 5ம் இட பலனை இப்பொழுதே தரும் ராகுவும் பிள்ளைகளால் அமைதி இன்மை, கல்வி, பதவி, சமூக அந்தஸ்து முதலியவற்றில் ஒரு பின்னடைவை செய்யும். அதே நேரம் 11ம் இடம் பலனை இப்பொழுதே தரத்துவங்கும் கேது ஒருவரே மொத்த மாத தேவைகளை பூர்த்தி செய்கிறார். சந்திரனின் சஞ்சாரம் ஓரளவு நன்மை தருவதாக இருக்கு ஜனன ஜாதகத்தை பொருத்து இது கூட அல்லது குறைவாக இருக்கும். பொருளாதாரம் பரவாயில்லை, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதும், பொது இடங்கள், உழைக்கும் இடம் இவற்றில் யோசித்து பேசுவதும் நன்மை தரும். ராசிநாதர் குரு பார்வையால் நன்மை அதிகம் செய்கிறார். சனி லாபத்தை பார்ப்பதால் உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும். அனைத்து முயற்சிகளையும் பெரியோர் ஆலோசனை படி யோசித்து செய்வது நலம் தரும். சுமார் மாதம்.
மூலம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 18.01.2022 அதிகாலை 04.50 மணி முதல் 19.01.2022 காலை 06.41 மணி வரை
பூராடம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 19.01.2022 காலை 06.41 மணி முதல் 20.01.2022 காலை 08.03 மணி வரை
உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 20.01.2022 காலை 08.03 மணி முதல் 21.02.2022 காலை 08.55 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : தக்ஷினாமூர்த்தி,கால பைரவர் வழிபாடு, நமசிவாய நாமம் உச்சரிப்பது, அன்னதானம், ஏழை குழந்தை படிக்க உதவிகள், சரீர ஒத்தாசைகள் இவற்றை செய்ய நலம் உண்டாகும்.
மகரம்:(உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4 பாதம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :
ராசிநாதன் ராசியில் வலுவாய் நன்மை தரும் சூரியன், வக்ர புதனுடன், 2ல் குரு,, 12ல் செவ்வாய் சுக்ரனுடன், ஓரளவு பொருளதாரம் நன்றாக இருக்கும். 10ம் இட பலனை முன்கூட்டியே தரும் கேதுவால் இரட்டை வருமானம் வரும், மேலும் புதன் வக்ரியாவது முயற்சிகளில் வலுவான வெற்றியை தரும் என்பதால் போட்ட திட்டங்கள், செயல்பாடுகளில் லாபம் இருக்கும். சனி பகவான் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது உத்தியோகத்தில் சொந்த தொழிலில் ஜீவன வகையில் அதிக நன்மை தருகிறது. வருமானம் வரும் ஆனாலும் மருத்துவ செலவுகள், ஆடம்பரப்பொருட்கள் வகையில் செலவுகள் போன்றவையும் சேமிப்பை தடுக்கும். எழுத்து, பணம், ஆசிரியர், திரைதுறையில் கதை வசனம் எழுதுவோர், ஸ்டேஷனரி கடை, தயாரிப்பாளர்கள், மீடியா போன்ற துறைகளும், சுகாதாரம் போன்ற வேலையில் இருப்போருக்கும் இது ஏற்ற காலம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் நலம் ராகு செவ்வாய் மருத்துவ செலவையும் சில மன சஞ்சலங்களையும் கொடுப்பார் குடும்ப அங்கத்தினர் சமூகம் என பலராலும் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது அனுசரித்து போவது, வார்த்தைகளை விடுவதில் கவனம் இருந்தால் இந்தமாதம் நன்றாக இருக்கும். கணவர் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோர் வகையில் சில மன வருத்தங்கள் உண்டாகும். நிதானம் தேவை.
உத்திராடம் 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 20.01.2022 காலை 08.03 மணி முதல் 21.02.2022 காலை 08.55 மணி வரை
திருவோணம் 4 பாதம் சந்திராஷ்டமம் : 21.01.2022 காலை 08.55 மணி முதல் 22.01.2022 காலை 09.19 மணி வரை
அவிட்டம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம் : 22.01.2022 காலை 09.19 மணி முதல் 23.01.2022 காலை 09.14 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: குலதெய்வ வழிபாடு, வேங்கடாஜலபதி வழிபாடு நலம் தரும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி விஷ்ணுசஹஸ்ரநாமம் படிப்பதும் நலம் தரும். முடிந்த அ:ளவு அன்னதானம், பறவை பசு போன்ற உயிரினங்களுக்கும் உணவிடுதல் மிக நன்மையை தரும்.
கும்பம்:( அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):
11ல் இருக்கும் சுக்ரன், செவ்வாய், 3ம் இடம் பலனை முன்கூட்டி தரும் ராகு இவர்கள் பூரணமாக நன்மை செய்வதும், மற்றவர்கள் மத்திய பலனை தருவதும் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கும். ராசில் இருக்கும் குரு பார்வை 5, 9ல் அதனால் பொருளாதாரம் ஜீவன வகையில் வருவாய் அதிகரிப்பு இருக்கும், புத்திர பாக்கியம், திருமணம் இவற்றை எதிர்பார்த்தோருக்கு நிறைவேறும் காலம், 4க்குடையவர் லாபத்தில் பூமி காரகனுடன் அதனால் சிலருக்கு புதுவீடு வாங்கும் நிலையும் அல்லது வேறு நல்ல வீட்டுக்கு குடிபோகும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கட்டாயம் எதிர்பார்க்கலாம், விரும்பிய இடமாற்றம் சிலருக்கு இருக்கும். சொந்த தொழிலில் தேக்க நிலை மாறி லாபம் வரும். ஆடம்பர பொருட்கள் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அழகு சாதன பொருட்கள் ஆடை அலங்கார பொருட்கள் அழகு நிலயம் வங்கி, அக்கவுண்ட்ஸ் போன்ற துறைகளில் வேலை செய்வோர், சொந்த தொழில் செய்வோருக்கு வருமானம் பெருகும். சொறி சிரங்கு உஷ்ணம் வயறு, கண் எலும்புகள் போன்றவற்றில் பாதிப்பு பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் என்றும் இருக்கும் கவனம் தேவை பொதுவில் பரவாயில்லை என்பதாக கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும் அதே நேரம் விரயமும் இருக்கும். யோசித்து செயல்படுவது நலம் தரும்.
அவிட்டம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 22.01.2022 காலை 09.19 மணி முதல் 23.01.2022 காலை 09.14 மணி வரை
சதயம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 23.01.2022 காலை 09.14 மணி முதல் 24.01.2022 காலை 08.42 மணி வரை
பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 24.01.2022 காலை 08.42 மணி முதல் 25.01.2022 காலை 07.50 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் கும்பகோணம் விஜயவல்லி தாயார் சமேத ஸ்ரீசக்ரபாணி பெருமாளை வழிபடுவது, ராம நாமம் ஜபம் செய்வதும், முடிந்த அளவு ஏழை எளியோருக்கு உதவுதல் நலம் தரும்.
மீனம்:( பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி 4 பாதம், ரேவதி 4 பாதம் முடிய):
பத்தில் சுக்ரன் செவ்வாய் லாபத்தில் சூரியன் புதன் சனி, பார்வையால் ராசியதிபதி குரு, அவ்வப்போது சந்திரன் என பெரும்பாலான கிரஹங்கள் சாதகம், நினைப்பது நிறைவேறும். கடந்தகால முயற்சிகள் இப்பொழுது பலன் தரும். பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும், இல்லத்தில் மகிழ்ச்சி தாமதமான திருமணம், குழந்தை வீடு, வாகன யோகங்கள் கைகூடிவரும். உத்தியோகம் வகையில் நல்ல மாற்றம் இருக்கும் உற்சாகமாக உழைப்பீர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும், விருந்து கேளிக்கைகள், ஆடை ஆபரண சேர்க்கை, திருத்தல யாத்திரை எல்லாம் சுகமாக அமையும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற மாதம் இது சாதகமான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் அடுத்துவரும் வருடம் மிக வெற்றியாக அமையும். பொதுவில் கேது மற்றும் ராகு உடல் பிரச்சனை, குடும்ப வகையில் சிறு சலசலப்பு தந்தாலும் உங்கள் மன உறுதியில் அது சரியாக மாறிவிடும். பெரும்பாலும் நன்மையே உடல் ஆரோக்கியத்திலும் குடும்பத்தில் உள்ளோர் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை இந்த மாதம் நல்ல மாதம்.
பூரட்டாதி 4ம் பாதம் சந்திராஷ்டமம் : 24.01.2022 காலை 08.42 மணி முதல் 25.01.2022 காலை 07.50 மணி வரை
உத்திரட்டாதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 25.01.2022 காலை 07.50 மணி முதல் 26.01.2022 காலை 08.40 மணி வரை
ரேவதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 26.01.2022 காலை 08.40 மணி முதல் 27.01.2022 அதிகாலை 04.35 மணி வரை
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: ஆஞ்சநேயர் ராமர் வழிபாடும் கோயில் சென்று விளக்கேற்றி ஸ்லோகம் சொல்லி வழிபடுவது அனுமான் சாலிசா சொல்வது நலம் தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் பசித்தோருக்கு உணவிடுவதும் துன்பங்களை குறைக்கும்.
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922
ஃபோன் நம்பர் : 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@hotmail.com
!!ஸுபம்!!