மார்ச் 18 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். மக்கள் தொடர்புத்துறையில் இருப்பவர்கள் வாக்குறுதிகள் கொடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : சிந்தனைகள் தோன்றும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.


🕉️ரிஷபம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

சங்கம் தொடர்பான பணிகளில் முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீடு மற்றும் வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும். கடன் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சந்திப்புகள் ஏற்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


🕉️மிதுனம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேம்படும். திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.


🕉️கடகம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : செலவுகள் ஏற்படும்.


🕉️சிம்மம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️கன்னி
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

எதிர்பாராத அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் சில நேரங்களில் இன்னல்களை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : சோர்வான நாள்.
அஸ்தம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️துலாம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளை குறித்து ஆலோசனைகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️விருச்சிகம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : தனவரவுகள் மேம்படும்.
கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.


🕉️தனுசு
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தடைபட்ட வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.
கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபமும், அனுபவமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


🕉️மகரம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிக்கேற்ற பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவோணம் : தீர்வு கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.


🕉️கும்பம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

சாதுர்யமாக செயல்பட்டு இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : இழுபறிகள் அகலும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️மீனம்
மார்ச் 18, 2021
பங்குனி 05 – வியாழன்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உபரி வருமானம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆவணம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அறிவு வெளிப்படும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : புரிதல் மேம்படும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.