மே 3 ராசி பலன்

🕉️மேஷம்
மே 03, 2021

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : மாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.


🕉️ரிஷபம்
மே 03, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
மே 03, 2021

பழைய நிகழ்வுகள் பற்றி சிந்திப்பதை குறைத்துக்கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். விளையாட்டுத்தனமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.


🕉️கடகம்
மே 03, 2021

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : தீர்வு கிடைக்கும்.
ஆயில்யம் : நட்பு விரிவடையும்.


🕉️சிம்மம்
மே 03, 2021

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : நெருக்கடியான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : பொறுப்புகள் குறையும்.


🕉️கன்னி
மே 03, 2021

எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைப்புகள் காலதாமதமாக கிடைக்கும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.
சித்திரை : அனுகூலமான நாள்.


🕉️துலாம்
மே 03, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பாக்கிகள் வசூலாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மனை மற்றும் வாகனம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும். விவசாயம் தொடர்பான பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : லாபம் மேம்படும்.


🕉️விருச்சிகம்
மே 03, 2021

வாக்குவன்மையினால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். சகோதரர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.
சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️தனுசு
மே 03, 2021

கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : விவாதங்கள் மறையும்.
பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம் : கனிவு வேண்டும்.


🕉️மகரம்
மே 03, 2021

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள்
மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.


🕉️கும்பம்
மே 03, 2021

உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெளிவை அளிக்கும். தொழில் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
சதயம் : பொருளாதாரம் மேம்படும்.
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️மீனம்
மே 03, 2021

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உழைப்பிற்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அறிவு வெளிப்படும்.
உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.