நேற்று ட்விட்டரில் பல பிரபலங்களின் ஹேண்டில்கள் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் $118211.37 சாதாரண நபர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.. பொதுவாய் இப்படி ஹேக் ஆகும் ஹேண்டில்களில் இருந்து விவகாரமான டிவீட்களோ படங்களோ வரும். ஆனால் இவர்கள் ஹேக் செய்தது சாதாரண நபர்களின் ஹேண்டில்கள் அல்ல. ஹேக் ஆனதில் சில ஹேண்டில்கள் வேரன் பப்பட், ஒபாமா, பில் கேட்ஸ், ஜோ பிடன் , எலன் மாஸ்க்.
ஹேக் செய்தவர்கள் கீழே படத்தில் உள்ள மெசேஜை போஸ்ட் செய்தனர். அதாவது , நீங்கள் எவ்வளவு பிட் காயின் அனுப்புகிறீர்களோ அதற்கு இரட்டிப்பாக பிட் காயின் அனுப்பப்படும் என பிரபலமானவர்களின் ஹேண்டில்களில் இருந்து ட்வீட் செய்யப்பட்டதால் அதை நம்பி மொத்தம் $118211.37 இழந்துள்ளனர். ஹேக் செய்தவர்கள் எந்த பிட்காயின் அக்கவுண்டில் வந்த மொத்த காசையும் சுருட்டிக் கொண்டு $80 மட்டும் விட்டு சென்றுள்ளனர். ட்விட்டர் இவர்களின் அக்கவுண்ட்டை இப்பொழுதைக்கு சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளார்கள். விஷயம் இப்பொழுது விசாரணையில்.


எல்லா நாடு மனிதர்களுக்கும் பணத்தின் மேல் பேராசை உள்ளது. கொடுப்பதற்கு இரட்டிப்பாக கிடைக்கும் என்றவுடன் அதுவும் பிரபலங்கள் சொல்கின்றனர் என்னும் பொழுது அனைவரும் நம்பி இப்பொழுது காசை இழந்து நிற்கின்றனர். காசு ஆசை யாரை விட்டது ?