21 malware apps found and removed from Google play

பலமுறை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் புது புது பெயரில் புது புது வடிவில் மால்வேர் செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது புதிதாய் 21 மால்வேர் செயலிகளை அவஸ்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இப்பொழுது இந்த 21 செயலிகளில் 19 செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த 21 மால்வேர் செயலிகள் மொத்தம் எட்டு மில்லியன் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.

ஒருமுறை இதை நீங்கள் இன்ஸ்டால் செய்துவிட்டால் இதை நீக்குவது கடினம். நீங்கள் தெரியாமல் இன்ஸ்டால் செய்தாலும் கூட இது தன்னை தானே மறைத்துக்கொள்வதால் நீங்கள் செட்டிங்ஸ்ல் சென்று பார்த்தாலே தவிர இது உங்களின் மொபைலில் இருப்பது தெரியாது.

என்ன செய்யும் இந்த செயலிகள் ?

மேலோட்டமாய் பார்த்தல் இந்த செயலிகளில் பிரச்சனையும் இருக்காது. ஆனால் இன்ஸ்டால் செய்துவிட்டால் தொடர்ந்து விளம்பரங்களை காட்டிக்கொண்டே இருக்கும். உங்களை செயல்பட விடாது. அதே போல் மொபைல் ஹோம் ஸ்க்ரீனில் இது இருக்காது. செட்டிங்ஸ் சென்று uninstall apps சென்று பார்த்தால்தான் இருப்பது தெரியும்.

21 malware infected apps

Shoot Them
Crush Car
Rolling Scroll
Helicopter Attack – New
Assasin Legend – 2020 New
Helicopter Shoot
Rugby Pass
Flying Skateboard
Iron it
Shooting Run
Plant Monster
Find Hidden
Rotate Shape
Jump Jump
Sway Man
Dessert Against
Cream Trip – New
Props Rescue

Find 5 Differences – 2020 NEW and Find the Differences – Puzzle Game என்ற இரண்டு செயலிகள் இன்னும் நீக்கப்படவில்லை. இவை எல்லாமே ஏற்கனவே புகழ்பெற்ற கேம் செயலிகள் பெயரை கொண்டுள்ளதால் நாம் எளிதில் ஏமாற வாய்ப்புகள் அதிகள்.

எந்த ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் முன்பும் அந்த செயலியை பற்றி கூகிளில் தேடி படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.