கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்பரங்களை காட்ட ஆரம்பித்ததுதான். முன்பு கணினி மட்டுமே இருந்த காலத்தில் பிரவுசரில் இத்தகைய Adware அதிகமாக வரும். பலபேருக்கு பிரச்சனையாகும். இப்பொழுது அதிகமாக மொபைல் உபயோகம் செய்யத் துவங்கியபின் செயலிகள் வடிவில் இவை வருகின்றன.
இந்த 29 Apps பெரும்பாலும் போட்டோ எடிட் பண்ண உதவும் செயலிகளாகத்தான் உள்ளன. ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளின் லிஸ்ட் கீழே உள்ளது.
Auto Picture Cut, Color Call Flash, Square Photo Blur, Square Blur Photo, Magic Call Flash, Smart Blur Photo, Smart Photo Blur, Super Call Flash, Smart Call Flash, Blur Photo Editor, Blur Image, Easy Blur, Image Blur, Auto Photo Blur, Photo Blur, Photo Blur Master, Super Call Screen, Square Blur, Square Blur Master. இவற்றை நிறுவி நீங்கள் அதை உபயோகித்து எதோ ஒரு போட்டோ எடிட் செய்தபின் அதன் சுயரூபத்தை காட்ட துவங்கும். உங்கள் மொபைல் முழுவதும் தானாக விளம்பரங்கள் வர துவங்கும். சில செயலிகள் தானாகவே ப்ரவுசரையும் ஓபன் செய்யும். இந்த மாதிரி செயலிகளை out-of-context (OOC) செயலிகளை என அழைப்பர். இத்தகைய செயலிகளில் இருந்து தப்பிக்க, புதிய செயலிகளை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்யவும். வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அடுத்து எந்த செயலியை டவுன்லோட் செய்வதாக இருந்தாலும் அதற்கு என்ன ரேட்டிங் வந்துள்ளது என்ன மாதிரி விமர்சனம் ப்ளே ஸ்டோரில் எழுதியுள்ளனர் என்று சில நிமிடங்கள் செலவு செய்து படிக்கவும். அதன் பின் இன்ஸ்டால் செய்யவும். அதே போல் ஒரு சிறந்த வைரஸ் ஸ்கேனர் மொபைலில் நிறுவிக்கொள்வது நல்லது.