அனைத்து மென்பொருள் மற்றும் செயலி நிறுவனங்களும் தங்களின் செயலியின் வடிவம் அது வேலை செய்யும் விதம் என பலவிதத்தில் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த மாற்றங்கள் அனைத்தும் முதலில் பீட்டா வடிவில் வெளியிடப்படும். அது எப்படி வேலை செய்கின்றது என்பதை பொறுத்து அதை அனைவருக்கும் ரிலீஸ் செய்வார்கள். இப்பொழுது Microsoft Edge for Android பீட்டாவில் புதிதாய் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். நீங்கள் மைக்ரோசாப்ட்டின் பீட்டா வான மைக்ரோசாப்ட் எட்ஜ் இன்சைடர் ப்ரோக்ராமிற்கு சப்ஸ்க்ரைப் செய்திருந்தால் இந்த மாற்றங்களை காணலாம்.
பொதுவாய் எல்லா ப்ரவுஸரிலும் மெனு மேலே அல்லது வலது பக்கத்தில் வைப்பார்கள். இது உபயோகிப்பாளர்களின் வசதிக்காக செய்வது. Microsoft Edge for Android செயலியில் அது கீழே இருக்கும். இப்பொழுது அனைவருக்குமான செயலியில் இருக்கும் வடிவம்
![](https://tech4india.in/tamil/wp-content/uploads/sites/2/2021/03/IMG_20210325_101718-461x1024.jpg)
இப்பொழுது பீட்டா பதிப்பில் வந்துள்ள வடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
![Microsoft Edge for Android](https://tech4india.in/tamil/wp-content/uploads/sites/2/2021/03/Edge-Grid-Menu-1024x572.jpg)