Trump Election Campaign Fraud

அமெரிக்காவை பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் வசூலிப்பது வெளிப்படையாக நடக்கும். கம்பெனிகள் கட்சிகளுக்கு எவ்வளவு கொடுத்தோம் என்றும் சொல்லும். ஆனால் அதிலும் ட்ரம்ப் பிரச்சாரத்திற்கு பணம் வசூலித்ததில் மோசடி நடந்துள்ளது இப்பொழுது வெளிவந்துள்ளது. இது குறித்து NYT பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி.

இதை தொழில்நுட்ப வட்டாரங்களில் “dark Patterns” என்றும் அழைப்பர். அதாவது பொதுவாய் இந்த மாதிரி பணம் வசூலிக்கும் தளங்களில் சில ஆப்ஷன்கள் இருக்கும் ஒரு முறை மட்டும் பணம் செலுத்துவது அல்லது மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவது ( Recurring Payment ) என. ஆனால் டிபால்டாக எந்த ஆப்ஷனும் தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடாது. இந்த தேர்தல் நிதி விஷயத்தில் இவர்கள் செய்ததே இதுதான். வாராவாரம் அல்லது மாதாமாதம் பணம் செலுத்துவது என்ற ஆப்ஷனை பொடி எழுத்தில் போட்டு அது எப்பொழுதும் டிக் ஆகி இருப்பது போன்று செட்டிங் செய்துவிட்டனர். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது தெரியும். பலருக்கும் இரண்டு மாத ஸ்டேட்மென்ட் அல்லது கார்ட் பில் வந்தப்பிறகே தெரிந்துள்ளது. இப்பொழுது பலரும் காசு கேட்டு “dispute claim ” file பண்ணியுள்ளனர். கீழே உதாரணங்கள்

//One Kansas City supporter who donated $500 saw his account tapped for $3,000 that month. Another realized their $990 donation had become $8,000.//

//A Trump spokeperson admitted at least $19.7 million worth of its transactions had been disputed. And those are just from people who bothered to dispute the charges.//

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.