Alert- MI A3 – Don’t update to Android 11

பொதுவாய் எந்த ஒரு அப்டேட் மொபைல்களுக்கு அனுப்புவதாக இருந்தாலும் அதற்கு முன் பல கட்ட சோதனைகள் நடக்கும். முதலில் அவர்களே டெஸ்டிங் செய்வார்கள். பின் பீட்டா பதிப்பு வரும். அதில் டெஸ்ட் செய்து வரும் பீட் பேக் பொறுத்து மாற்றங்கள் செய்து எந்த பிரச்சனை இல்லை என்ற பின்னரே அது OTA அப்டேட்டாக பயனாளர்களுக்கு செல்லும்.

இப்பொழுது Xiamoi நிறுவனத்தின் MI A3 மொபைலுக்கு ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் அனுப்பியுள்ளனர். அப்டேட் வந்ததை நம்பி அப்டேட் செய்த பலரின் மொபைல் பிரிக் (BRICK) ஆகி விட்டது. அதாவது ஆன் ஆகவில்லை. உபயோகப்படுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது.

Mi A3 ஆன்ட்ராய்ட் ஒன் இயங்குதளத்தை உபயோகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு firmware அப்டேட்டின் பொழுது இரண்டு சிம் ஸ்லாட்களில் ஒன்று செயல் இழந்தது.

இப்பொழுது இந்த அப்டேட்டை நிறுத்தி வைத்துள்ளனர். அதையும் மீறி உங்களுக்கு இந்த அப்டேட் வந்தால் இப்பொழுது அப்டேட் செய்ய வேண்டாம்.

About Author