End to End Encryption – Telegram

வாட்ஸ் அப் / சிக்னல் செயலிகள் போலின்றி டெலிகிராம் செயலியில் “End to End Encryption” நீங்கள்தான் ஆக்டிவேட் செய்யவேண்டும். பொதுவாய் அதில் பேசப்படுபவை என்க்ரிப்ட் ஆகாது. எனவே நீங்கள் என்க்ரிப்ட் ஆக்டிவேட் செய்யவில்லையெனில் நீங்கள் யாருடன் சாட் செய்கிறீர்கள் எத்தனை முறை சாட் செய்கிறீர்கள் பேசுகிறீர்கள் என்ற விஷயங்களை டெலிகிராம் நிறுவனத்தினர் பார்க்க முடியும். என்ன பேசுகிறீர்கள் என்பதும் ஸ்டோர் செய்யப்படுகிறது. அதை தாங்கள் பார்ப்பதில்லை என அவர்கள் சொன்னாலும் நம் பாதுகாப்பிற்காக என்க்ரிப்ட் ஆக்டிவேட் செய்வது நல்லது.

எப்படி என்க்ரிப்ட் செய்வது

  1. எந்த சாட் என்க்ரிப்ட் செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த சாட் விண்டோவை ஓப்பன் செய்து கொள்ளவும்.
  2. அந்த விண்டோவில் மேலே இருக்கும் கான்டெக்ட் பெயரை க்ளிக் செய்யவும்.
  3. பின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
  4. அதில் வரும் “Start Encrypt Chat ” க்ளிக் செய்யவும்
  5. பின் வரும் மெஸேஜில் கன்பார்ம் செய்யவும்
  6. இப்பொழுது நீங்கள் சாட் செய்வது என்க்ரிப்ட் என்ற உறுதி மெசேஜ் கிடைக்கும்
  7. இதை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க இயலாது.ஆனாலும் வேறு ஸ்க்ரீன் ஷாட் செயலி மூலம் எடுக்க முயன்றால் தடுக்க இயலாது.

About Author