கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு பாமக நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் ஆன்லைன் செயலிகள் மூலம் கொடுக்கப்படும் கடன்களை பற்றியும் அதன் பின் அவர்கள் செய்யும் தொல்லைகள் பற்றியும் பேசி இருந்தார். மீண்டும் இதை பற்றி நேற்று ஒரு ட்வீட் போட்டிருக்கார். இதை பற்றி வேறெந்த அரசியல் கட்சியும் பேசியதாக தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய மோச மாய வலை.
கூகிள் ப்ளே ஸ்டோரில் சென்று லோன் ஆப் என்று தேடினால் நூற்றுக்கணக்கான செயலிகள் வந்து விழுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆர்பிஐ அனுமதி இல்லாமல் இயங்குபவையே . இவர்களில் பெரும்பான்மையோர் இயங்கும் முறை
- உங்கள் பான் (PAN ) எண்
- உங்கள் ஆதார் எண்
இந்த இரண்டும் இருந்தால் போதும் இவை லோன் தர ரெடி ஆகும். 5000 முதல் லட்சக்கணக்கில் தர தயார். நீங்கள் செயலியை முதலில் உபயோகிக்கும் பொழுதே உங்கள் மொபைலில் உள்ள கான்டக்ட் விவரங்களை எடுக்க அனுமதி கேக்கும். அனுமதி கொடுத்தால்தான் தொடர்ந்து உபயோகிக்க முடியும். நீங்கள் உங்கள்தவணையை கட்ட முடியாத பட்சத்தில் உங்கள் காண்டக்ட்டில் உள்ளோருக்கு வாட்ஸ் அப் தகவலும் பின் அழைப்பும் செல்லும். நீங்கள் பணம் கட்டும் வரை உங்களையும் உங்கள் நண்பர்களையும் தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருப்பார்கள். இது ஒரு வகை.
இதில் இன்னொரு வகை மோசடி உண்டு. நீங்கள் பான் எண் / ஆதார் எண் கொடுத்தவுடன் உங்கள் லோனை உடனடியாக அப்ரூவ் செய்வார்கள்.ஆனால் அந்த காசு வேண்டுமென்றால் ப்ராசஸிங் கட்டணம் 300-500 வரை உங்களை அவர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லுவார்கள். நீங்கள் சுதாரித்துக் கொண்டால் பிழைத்தீர்கள். இல்லையேல் இந்த 500 நஷ்டத்தில் எழுதவேண்டியதுதான்.
இந்த மாதிரி அனுமதி இல்லாமல் செயல்பட்ட ஒரு லோன் ஆப் சம்பந்தமாக தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்த 423 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாய் நடந்த ரெய்டில் சீன பெண் ஒருவரின் பாஸ்போர்ட் காப்பி கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை நாடு முழுக்க நடந்த பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரிக்கவேண்டும். நண்பர்களே இந்த செயலிகள் மூலம் லோனும் வாங்க வேண்டாம்.