வாட்ஸ் அப் செயலி இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாகும். எந்த அளவிற்கு இதில் நன்மை உண்டோ அதே அளவிற்கு தீங்கும் உண்டு. உதாரணத்திற்கு ,இதில் பரவும் உண்மைக்கு புறம்பான செய்திகள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்கள். இவற்றை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அதனால் பெரிதாய் எந்த வித நன்மையையும் நடக்கவில்லை என்பதே உண்மை. இப்பொழுது இந்திய அரசாங்கம் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மெசேஜுடனும் ஒரு Alpha-numeric hash கீ உருவாக்கி அனுப்ப சொல்லியுள்ளது. இதன் மூலம் மெசேஜ் என்க்ரிப்ஷனை பாதிக்காமல் யார் அனுப்பியது என கண்டுபிடிக்க இயலும்.
சமீபகாலமாய் சமூகவலைத்தள செயலிகளுக்கு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தேவையற்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவுவதை தவிர்க்கவே. ஆனால் வாட்ஸ் அப் நிறுவனம் தனது என்க்ரிப்ஷனை காரணம் காட்டி ஒத்துக்கொள்ள மறுத்து வருகிறது. இந்த நிலையில்தான் அரசாங்கம் இந்த Alpha-numeric hash கீ ஆப்ஷனை கூறியுள்ளது. இதற்கு வாட்ஸ் அப் எந்த வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஐடி சட்டத்தின் படி அரசாங்கம் கேட்டால் எந்த ஒரு செய்தியையும் டீ க்ரிப்ட் செய்து தரவேண்டும். அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. ஆனால் அரசாங்கம் இதுவரை இதை வலியுறுத்தவில்லை.
இதற்கு முன்பே சென்னை ஐ ஐ டி ப்ரோபசர் திரு காமகோடி அவர்கள் அனுப்பப்படும் ஒவ்வொரு மெஸேஜையும் மொபைல் நம்பருடன் இணைத்து டிஸ்பிளே பண்ணலாம் என்று கூறியிருந்தார்.