ஆன்ட்ராய்ட் / ஆப்பிள் என்று எந்த ஒரு கைப்பேசி உபயோகப்படுத்தினாலும் பிரச்சனை சிறிய ஸ்க்ரீனை அதிக நேரம் பார்ப்பதே. இதனால் தலைவலி / கண் பிரச்சனை போன்றவை அதிகம் வருகிறது. அதே போல் வயதானவர்களுக்கும் பிரச்சனை உண்டு. இன்னும் கொஞ்ச நாளில் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். ஆம் உங்கள் விண்டோஸ் லேப்டாப் / டெஸ்க்டாப் கணினிகளில் இருந்தே உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலை உபயோகிக்கலாம். இப்பொழுதும் சில மென்பொருட்களை நிறுவினால் இதை செய்யலாம். ஆனால் அவை நம்பத்தகுந்தவையாக இல்லை.
இந்த புதிய வசதியை இன்னும் கொஞ்சநாளில் அனைத்து விண்டோஸ் 10 உபயோகிப்பாளர்களுக்கும் அளிக்க உள்ளது மைக்ரோசாப்ட். இப்பொழுது windows insidersக்கு ( கிட்டத்தட்ட பீட்டா டெஸ்டிங் மாதிரி) மட்டும் இந்த App streaming வந்துள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். இப்பொழுதைக்கு ஒரு துவக்கமாக சாம்சங் மொபைலில் மட்டுமே இந்த வசதியை உபயோகப்படுத்த இயலும். அதிலும் அனைத்து மாடல்களும் இந்த வசதியை பெறவில்லை. குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அந்த மாடல்களின் லிஸ்டை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். அதே போல் App streaming செயல் பட, மொபைல் மற்றும் கணினி ஒரே வயர்லெஸ் நெட்ஒர்க்கில் இருப்பது அவசியம் .
என்ன என்ன செய்யலாம் ?
- உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளை பார்க்கலாம்
- உங்களுக்கு விருப்பமான செயலிகளை விண்டோஸ் டாஸ்க் பாரில் பின்(pin) செய்து வைத்துக்கொள்ளலாம்
- கணினியில் இருந்தே எந்த செயலியையும் ஓபன் செய்யலாம்
- செயலிகளின் நோட்டிபிகேஷன்களை கணினியில் இருந்தே பார்க்கலாம்
- ஆனால் மொபைலில் இருப்பது போலவே ஒரு சமயத்தில் ஒரே ஒரு செயலியை மட்டுமே பார்க்க இயலும்
- செயலியை துவக்கும் பொழுது செயலையும் மொபைல் ஸ்க்ரீனும் இரண்டு தனி தனி ஸ்க்ரீனாக ஓபன் ஆகும் .
கீழே வீடியோவை பார்க்கலாம்