Arattai – Made in India Chat app

வாட்ஸ் அப் நிறுவனத்தின் ப்ரைவசி பாலிசி பிரச்சனையால் பலரும் சிக்னல் / டெலிகிராம் போன்ற செயலிகளை நகர்ந்துகொண்டிருக்கும் இந்த தருணத்தில் zoho நிறுவனத்தின் “அரட்டை” செயலி வந்திருக்கிறது. இது இந்திய செயலி என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

வாட்ஸ் அப் / சிக்னல் போன்ற செயலிகளை உபயோகப்படுத்தியவர்களுக்கு இதை உபயோகப்படுத்துவதில் எந்தவித கஷ்டமும் இல்லை. இடது பக்கம் இருக்கும் மூன்று கோடுகளை தொட்டால் செயலியின் நான்கு ஆப்ஷன்கள் வரும். அதில் “settings” என்ற ஆப்ஷனில் நுழைந்தால் “ஸ்டோரேஜ் ” “நோட்டிபிகேஷன்ஸ்” , செயலியின் தீம் ( கலரை ) தேர்வு செய்துகொள்ளலாம். அதே போல் ” Night Mode ” வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் பல வருடம் கழித்து வந்துள்ள இந்த வசதி இதில் துவக்கத்திலேயே உள்ளது.

நீங்கள் உங்கள் “usage statistics ” zoho நிறுவனத்துடன் பகிர விரும்பினால் ” Privacy settings சென்று அதை “ஆன்” செய்யலாம். ஒன்று நினைவு வைத்துக் கொள்ளவும்.

எந்த செயலியை நீங்கள் உபயோகித்தாலும் உங்கள் மொபைல் பற்றிய தகவல்கள் அவர்களால் சேகரிக்கப்படும்.அதை தவிர்க்கவே இயலாது. அதை எவ்விதம் உபயோகிக்கப்போகிறார்கள் என்பதே நாம் பார்க்கவேண்டிய ஒன்று. இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றவர்களிடம் பகிரும் முன் உங்கள் அனுமதி கேட்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதில் உள்ள ஆடியோ / வீடியோ வசதியை இன்னும் சோதிக்கவில்லை. ஆரம்பத்தில் சில வசதிகள் இல்லாமல் போகலாம். ஆனால் போக போக அவை வரும்.

Zoho நிறுவனத்தின் மெயில் உபயோகிக்கிறேன். இதுநாள் வரை எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒரு இந்திய நிறுவனத்தின் முன்னெடுப்பை நாம் வரவேற்க வேண்டும்.

Download Android app

Download Ios App

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.