Asur

Asur – Season 1

ஐபிஎல் ஜியோ சினிமா செயலியில் பார்த்த பொழுது வந்த விளம்பரத்தைப் பார்த்துதான் ” Asur – Season 1 : வெப் சீரியஸ் பார்க்கத் துவங்கினேன். முதல் சீசனில் மொத்தம் 8 எபிசோட் இருக்கிறது. நல்ல ஒரு கதைக் களம் கிடைத்திருந்தும் பல வகையில் சொதப்பி வைத்துள்ளார் இயக்குனர் என்றே சொல்லவேண்டும்.

அமேசான் ப்ரைம் & மற்ற தளங்களில் பல கிரைம் இன்வெஸ்டிகேஷன் தொடர்களை பார்த்துவிட்டு இந்த தொடரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக முதலாவது அல்லது இரண்டாவது எபிசோட் உடன் நிறுத்தி விடுவோர் பெரும்பாலானோர். சில குறைகள் பார்த்தவுடன் யாரும் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கிறது. ஒரு குற்றம் நடந்தால் அதை விசாரிப்பது விசாரணை அதிகாரி. குற்றம் நடந்த இடத்தில் இருந்து கிடைக்கும் தடயங்களை ஆராய்ந்து அதில் கிடைக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வதுதான் தடயவியல் துறையை சேர்ந்தவர்களின் வேலை. ஆனால் இங்கோ தடயவியல் துறையை சேர்ந்தவர்களே அனைத்து விசாரணையையும் செய்கின்றனர். இது எந்த ஊரில் சாத்தியம் எனத் தெரியவில்லை.

அதேபோல் , சர்வர் ஹேக் செய்வதாக காட்டுவார்கள். அப்பொழுது லேப்டாப் ஸ்க்ரீன் காட்டாமல் இருந்திருக்கலாம். விண்டோஸ் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் ” ipconfig ” கட்டளை அடித்தவுடன் ஹேக் செய்வதாக காட்டுவார்கள். இதெல்லாம் சிறிய விஷயங்கள்தான் ஆனால் ஒரு தொடரை நம்மைத் தொடர வைப்பது இது போன்ற சிறு விஷயங்களையும் சரியாக செய்வதே. இந்தியாவில் எனக்குத் தெரிந்து அகில இந்திய அளவில் பிறந்த நேரத்துடன் எந்த விட டேட்டாபேஸும் அரசாங்கம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி காட்டுகிறார்கள். அதிலும் சக அரசுத் துறையின் சர்வரை இன்னொரு அரசு துறை ஹேக் செய்வதாக. இதெல்லாம் என்னை போன்றவர்களுக்கே வெளிப்படையாக தெரியும் ஓட்டைகள்.

கதைக் களம்

இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் சீரியல் கொலைகள். கொலை செய்யப்படுபவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவர்கள். அவர்களின் ஒரு விரலில் பாதி மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது. அர்ஷத் வார்ஷி தலைமையிலான ஒரு சிபிஐ குழு இந்த கொலைகளை விசாரிக்கிறது. இதன் நடுவே அர்ஷத்தின் மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சிபிஐயில் வேலை செய்து பின் எப் பி ஐ யில் வேலை செய்யும் Barun அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சிபிஐயில் சேருகிறார். அவர் இந்த விசாரணையில் இறங்க , கிடைக்கும் தடயங்களை வைத்து அர்ஷத் அடியாள் மூலம் தனது மனைவியை கொலை செய்தார் என கூற அர்ஷத் கைது செய்யப்படுகிறார்.

இதில் அர்ஷத் விசாரணை அதிகாரியா இல்லை தடயவியல் அதிகாரியா இல்லை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடிய மருத்துவரா எனத் தெரியவில்லை. எல்லா வேலையையும் செய்கிறார். Barun னும் அப்படியே . (!!!???)

இதன் பின் திடீர் திருப்பமாக Barun கடத்தப்பட அதன் பின் எப்படி கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன என்பதே கதை. முதல் சீசன் முடிவில் வில்லனாக மூன்று பேர் அறியப்படுகின்றனர். ஆனால் இதில் யார் உண்மையான வில்லன் என்பது தெரியவில்லை. கதையை நன்கு கொண்டு செல்ல தெரிந்த இயக்குனருக்கு யார் யார் எந்த வேலையை செய்வார்கள் என சொல்லத் தெரியவில்லை என்பது பரிதாபம். ஜியோ சினிமா செயலியில் பார்ப்பதில் இன்னொரு சிக்கல், ஒவ்வொரு எபிஸோடிலும் ஒரு ஆறு விளம்பரம் வரும். அந்த எரிச்சலையும் சகித்துக் கொள்ள தயாராக இருங்கள்.

About Author

2 Replies to “Asur – Season 1”

  1. கிரைம் இன்வெஸ்டிகேஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    முதலில் இது க்ரைம் தொடரோ என்று நினைத்தேன்..விமர்சனம் என்பது வாசித்ததும் புரிந்தது. எந்த ஓடிடி யிலும் இல்லை என்பதால் பார்ப்பது சிரமம் என்று நினைக்கிறேன்.

    நல்ல விமரசனம். எப்படி இப்படியான ஓட்டைகள் இருப்பதை வெளியிடவும் செய்கிறார்கல்? யாரும் கேட்கமாட்டார்கள் என்பதாலோ?

    கீதா

Comments are closed.