Dahaad

Dahaad – என் பார்வையில்

இன்னும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு எதிரான நிலை கதை நெடுக வந்து கொண்டே உள்ளது. அதே போன்று ஜாதி வேறுபாடுகள் பார்க்கும் சமுதாயத்தை பற்றியும்.கதையின் மிகப் பெரிய பலமாக நான் கருதுவது, வில்லன் யார் என தெரிந்தும் அதன் பின் கதை தொய்வடையாமல் அவனை எப்படி பிடிக்கின்றனர் எப்படி நிரூபிக்கினறனர் என கொண்டு சென்றுள்ளதே. இது போன்ற சீரியல் கில்லர் கதைகளில் வில்லன் தெரிந்துவிட்டால் கதையில் தொய்வு வந்துவிடும். அது இதில் இல்லை.

Asur

Asur – Season 1

இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் சீரியல் கொலைகள். கொலை செய்யப்படுபவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவர்கள். அவர்களின் ஒரு விரலில் பாதி மட்டும் வெட்டி எடுக்கப்படுகிறது. அர்ஷத் வார்ஷி தலைமையிலான ஒரு சிபிஐ குழு இந்த கொலைகளை விசாரிக்கிறது. இதன் நடுவே அர்ஷத்தின் மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே சிபிஐயில் வேலை செய்து பின் எப் பி ஐ யில் வேலை செய்யும் Barun அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சிபிஐயில் சேருகிறார். அவர் இந்த விசாரணையில் இறங்க , கிடைக்கும் தடயங்களை வைத்து அர்ஷத் அடியாள் மூலம் தனது மனைவியை கொலை செய்தார் என கூற அர்ஷத் கைது செய்யப்படுகிறார்.