Bharat Griha Raksha Policy

Bharat Griha Raksha Policy – வீட்டுக்குக் காப்பீடு

இந்தியர்கள் பெரும்பான்மையோரின் ஆகப்பெரிய முதலீடு வீடு. வீட்டின் விலையில் 70-80% கடனாக இருந்தாலும் அதன் முழுப் பொறுப்பும் சொந்தக்காரருக்கே. வீடு இருந்தாலும் சேதமானாலும் வங்கிக்கு மாதாந்திரத் தவணை கட்டியே ஆகவேண்டும். அம்பதாயிரம் ரூபாய் இருசக்கர வாகனத்துக்கும் அஞ்சு லட்ச ரூபா காருக்கும் காப்பீடு எடுக்கும் நாம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு காப்பீடு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது மிகவும் தவறான போக்கு. 

வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கி ஊழியர் உங்களிடம் ஒரு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீட்டை விற்க முனைவார், தேவையான அளவு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுப்பது அத்தியாவசியம் ஆனால் வீட்டுக் கடனுடன் இணைந்த டெர்ம் பாலிசி பெருத்த நஷ்டம். தயவு தாட்சண்யமின்றை அதை நிராகரியுங்கள். ஆனால் வீட்டுக்குக் காப்பீடு மிக அவசியம் அதை எடுக்க மறக்காதீர்கள்.

வீட்டுக் காப்பீட்டின் ப்ரீமியம் அதிகமாக இருப்பதை உணர்ந்த மத்திய அரசு IRDAI மூலம் Bharat Griha Raksha Policy ஐ 2021 ஏப்ரல் மாதம் அறிமுகப் படுத்தி அனைத்து General Insurance நிறுவனங்களும் இத்திட்டத்தை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

இத்திட்டத்தின் படி வீட்டின் விலை அளவுக்கு Coverage பெறலாம். காப்பீட்டு அளவின் 20% (அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய்) க்கு வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களுக்கும் Coverage வழங்கப்படும். அதாவது 40 லட்சரூபாய் வீட்டுக்குக் காப்பீடு வாங்கினால் 8 லட்ச ரூபாய் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களுக்கு காப்பீடு கிடைக்கும். வீட்டுக்கு 1 கோடி ரூபாய் காப்பீடு வாங்கினால் பொருட்களுக்கு 10 லட்சரூபாய் காப்பீடு கிடைக்கும். 

அடிப்படைக் காப்பீடு தவிர இரு வேறு தெரிவுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன

1. நகைகள், பொருட்கள் அதிகம் வைத்திருப்போர் அவற்றுக்கு முழுக்காப்பீடு பெற நினைத்தால், அவற்றை Declare மற்றும் மதிப்பீடு செய்து அதைப் பெறலாம். 

2. வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது கணவர் (அ) மனைவிக்கு 5 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடு தேவைப்பட்டால் பெறலாம். 

காப்பீட்டின் காலம் : 10 ஆண்டுகள். பத்தாண்டுகள் முடிவில் இன்னொரு பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். 

இக்காப்பீட்டை எங்கு பெறலாம்? United Insurance, Bajaj Alliance, HDFC ERGO, ICICI Lombard உள்ளிட்ட அனைத்து General Insurance நிறுவனங்களிடம் பெறலாம் 

இக்காப்பீடு எதற்காக? தீ, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலோ, கலவரம் போன்ற மனிதச் செயல்களாலோ வீடு சேதாரம் ஆனால் இழப்பீடு பெறவே இக்காப்பீடு. வீட்டில் உள்ள பொருட்கள் சேதாரம் ஆனாலோ களவு போனாலோ அவற்றுக்கும் இழப்பீடு கிடைக்கும் 

Exclusions : போரினால் சேதாரம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்காது. விபத்துக்கோ களவுக்கோ உரிமையாளர் காரணமாக இருந்தாலும் இழப்பீடு கிடைக்காது. 

கட்டணம் எவ்வளவு? அது காப்பீட்டைப் பொறுத்து அமையும். சமீபத்தில் ஒரு கோடிக்கு சென்னையில் வீடு வாங்கிய நண்பர் 10 ஆண்டு காப்பீட்டுக்கு செலுத்திய One Time Payment 25000க்கும் குறைவு. வீட்டின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த கட்டணமே. 

குடும்பம் நல்லாருக்கணும்னு 80% கடனில் வீடு வாங்குவது முக்கியம் தான். அதை விட முக்கியம் தேவையான அளவு ஆயுள் காப்பீடும் வீட்டின் விலைக்கு Bharat Griha Raksha Policy யும் எடுப்பது அதை விட முக்கியம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.