வந்தார்கள், தோற்றார்கள் – 1

யாரிடமிருந்து ஆரம்பிப்பது, மூவருமே பராக்ரமசாலிகள். சட்டென்று தெளிவு. இவர்களுக்கெல்லாம் ஒரு மையப்புள்ளி, மகதம்! பாடலிபுத்திரம் அப்பேரரசின் தலைநகரம். நந்த வம்சத்தின் வழித்தோன்றலான தனநந்தனின் ஆட்சி. அச்சமயத்தில் இங்கிலாந்து,ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகள் தோன்றியிருக்கவேயில்லை. “வந்தார்கள், தோற்றார்கள் – 1”

Label

Label – Web Series

வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.

காற்றில் கலையும் மேகங்கள்

பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “

Bharat Griha Raksha Policy

Bharat Griha Raksha Policy – வீட்டுக்குக் காப்பீடு

வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கி ஊழியர் உங்களிடம் ஒரு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீட்டை விற்க முனைவார், தேவையான அளவு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுப்பது அத்தியாவசியம் ஆனால் வீட்டுக் கடனுடன் இணைந்த டெர்ம் பாலிசி பெருத்த நஷ்டம். தயவு தாட்சண்யமின்றை அதை நிராகரியுங்கள். ஆனால் வீட்டுக்குக் காப்பீடு மிக அவசியம் அதை எடுக்க மறக்காதீர்கள்

Whatsapp channels

Whatsapp channels

ஜூன் மாதம் புதிதாய் Whatsapp channels கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. முதலில் சில நாடுகளுக்கு மட்டும் வந்த இந்த வசதி இப்பொழுது 150 நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாய் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் + ஐ ஓ எஸ் மற்றும் டெஸ்க்டாப் என்று அனைத்திலிருந்தும் உபயோகப்படுத்த முடியும்.

நேர்த்திக் கடன்

நேர்த்திக் கடன்

குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………

வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)

This entry is part 4 of 4 in the series சேலத்துப் புராணம்

அத்தியாயம்-3 தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார். “இல்லை நாரதா! தக்ஷன் “வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)”

சேலத்துப் புராணம்

சேலத்துப் புராணம் – 1

This entry is part 1 of 4 in the series சேலத்துப் புராணம்

சேலத்திற்கும் விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊரின் நடு நாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீராஜகணபதியின் பாத கமலங்களை வணங்கி இந்தப் புராணத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இந்த தலத்தில்தான் ஔவையார் பல அற்புத நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். கஞ்சமலை சித்தர் தகடூர் அரசன் அதியமான் நெடுமான் அஞ்சிக்கு கொடுத்த நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கிய இடம் சேலம். ஔவையார் மாதவி என்ற பெண்மணியின் இரண்டு பெண்களின் திருமணத்திற்கு சேர சோழ பாண்டியர்களை வரவழைத்த இடம் சேலம். காய்ந்து போன பனை மரத்தைப் பூத்துக் குலுங்க வைத்து பனம்பழம் பறித்த இடம் இந்தச் சேலம் நகரம். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் முந்திக் கொண்டு கயிலாயம் சென்று விட ஔவையார் விநாயகர் அகவல் பாடியதும் தனது துதிக்கையால் செந்தூக்காகத் தூக்கி கயிலாயத்தில் விநாயகப் பெருமான் வைத்த இடம் இந்தச் சேலம் நகராகும். அந்தப் புராணத்தை அந்த விநாயகரின் பாதங்களைத் தொழுது தொடங்குகிறேன்.

உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.

என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.