நம்மில் பெரும்பாமையினர் True caller செயலியை உபயோகித்துக் கொண்டிருப்போம். ஏனென்றால் நமக்கு அறிமுகமான காலர் ஐடி செயலி அதுதான். அதுவமில்லாமல் சில மொபைல்களில் ப்ரீ – இன்ஸ்டால் ஆகி வரும் செயலி அது. ஆனால் இந்த செயலி மேல் பல்வேறு குற்றச்சாட்டு உண்டு. சில முறை தகவல் திருட்டு நடந்ததாகவும் செய்திகள் வந்தன. இந்த செயலிக்கு பதிலாக “ப்ரஜ்வல் சின்ஹா ” என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியதுதான் “Bharatcaller” செயலி.
இந்த செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இப்பொழுது 3.6 ரேட்டிங்கில் இருக்கின்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானபேர் இதை இன்ஸ்டால் செய்துள்ளதாக ப்ளே ஸ்டோர் கூறுகிறது.
கூகிள் ப்ளே ஸ்டோரில் சில reviews, நம் மொபைலில் ஸ்டோர் செய்யாதவர்கள் அலைக்கும் பொழுது ஸ்க்ரீனில் காட்டும் பெயர் தவறாக வருவதாக கூறியிருந்தது. அநேகமாய் அந்த பிரச்சனை சரி செய்யபப்ட்டிருக்க வேண்டும். ஏனென்றால் நேற்று நான் இந்த செயலியை இன்ஸ்டால் செய்யும் பொழுதே true caller செயலியை நீக்கிவிட்டுதான் இன்ஸ்டால் செய்தேன். அதன் பின் வந்த அழைப்புகளில் எனக்கு சரியாகத்தான் வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் சோதித்து பார்த்தால் தெரிந்துவிடும்.
பொதுவாய் “Bharatcaller” போன்ற செயலிகளை காலர் ஐடி பார்க்க மட்டுமே உபயோகிப்பேன். அதை திறந்து அந்த மூலம் டயல் செய்ய மாட்டேன். எனவே எனக்கு அந்த செயலியில் விளம்பரம் வந்தாலும் பிரச்சனை இல்லை. இது ஒரு பிரச்சனை என நினைப்பவர்கள் இந்த செயலியை தவிர்க்கவும். நான் உபயோகித்த வரை எந்த விளம்பரமும் வரவில்லை. ஆனால் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியில் விளம்பரம் வரும் என சொல்லி உள்ளது.
இன்ஸ்டால் செய்து முதல் முறை ஓபன் செய்யும் பொழுது சில பர்மிஷன் கேக்கும். அதை கொடுத்துதான் ஆகவேண்டும். அந்த பர்மிஷன் இல்லாமல் இந்த செயலி வேலை செய்யாது.
இத ஸ்க்ரீன் ஷாட் சில கீழே