அமேசான் நிறுவனத்தின் கிண்டில் செயலி வந்தபிறகு அதில் புத்தகம் வெளியிடுவோரின் எண்ணிக்கை அதிகமாகியது. அதே போல் புதிதாய் எழுத வருவோர் அனைவருக்கும் அது ஒரு வரம். அவர்கள் புத்தகங்களை எளிதில் புத்தகவடிவில் கொண்டு வர முடிகிறது. இப்பொழுது புதிதாய் இன்னுமொரு செயலி வந்துள்ளது. BYNGE என்ற இந்த செயலியை மார்ச் மாதம் கொண்டுவந்துள்ளவர்கள் Notion Press.
இந்த செயலியின் சிறப்பு ,புத்தகங்கள் வாசிக்க விரும்புவர்கள் அதற்கென எந்த செலவும் செய்யவேண்டாம் என்பதே. இலவசமாக படிக்க ஒரு செயலி. படிப்பதற்கு எந்த வித செலவும் இல்லை. சில புத்தகங்கள் முழுமையாய் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் பழைய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. அதுதவிர புதியதாய் வரும் புத்தகங்கள் ஒவ்வொரு அத்தியாயமாய் வாசிக்கலாம் அல்லது அவை முடிக்கப்படும்வரை காத்திருந்து முழுமையாய் வாசிக்கலாம்.
இது போன்ற செயலிகள் ஆங்கில புத்தகத்திற்கு நெறைய உள்ளன. நீங்கள் படிக்கும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு காயின் க்ரெடிட் ஆகும். அதை அடுத்து வரும் அத்தியாயங்களை படிக்க உபயோகப்படுத்தலாம் அல்லது காசு கொடுத்தும் வாங்கலாம் ஆனால் இந்த BYNGE செயலியில் அந்தமாதிரி எந்த வித விதிமுறைகளும் இல்லை. இப்பொழுதைக்கு முழுவதும் இலவசமாகத்தான் உள்ளது.
புத்தக வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய இங்கே செல்லவும்