அலெக்சாண்டர் என்கிற புயல் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து, பாரசீகத்தையும் வென்று வெற்றிக் களிப்புடன் பாரதத்தை நோக்கி மய்யம் கொண்டிருந்த சமயம் மிகச் சிறந்த அறிவாளியும், திறமைசாலியும், தாய் நாட்டு பற்றுக்கொண்டவனும், அரசியல் ஞானியும், தைரியசாலியுமான சாணக்கியன், சந்திர குப்தனையும் வேறு சில இளவல்களையும் ராஜ்ஜிய பரிபாலன கலைகளில் பயிற்று வித்துக் கொண்டிருந்தான்.