தெலுங்கு த்ரில்லர் படம் ” Chakravyuham: The Trap” . பிரபல நடிகர்கள் என்று யாரும் இல்லாது வந்துள்ள படம். ஜுன் மாதம் ரிலீஸான இந்த தெலுங்கு படம் அமேசான் ப்ரைமில் இருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சஞ்சயின் மனைவி Siri கொலையில் படம் துவங்குகிறது. விசாரணை அதிகாரியாக வரும் சத்யா ஆரம்பத்தில் இருந்தே சஞ்சய் மேல் சந்தேகத்துடனேயே இருக்கிறார். நடுவில் அவரது நண்பன் சரத் மேலும் சந்தேகம் கொண்டே விசாரணையை நடத்துகிறார்.
இதற்கிடையில் ஏற்கனவே இவர்களுடன் சண்டை போட்ட லோக்கல் ரவுடி கொலை செய்யப்பட அவன் வீட்டில் சஞ்சய் வீட்டில் இருந்து திருடப்பட்ட பணம் , நகை மற்றும் கொலை செய்ய உபயோகம் செய்யப்பட்ட கத்தி கிடைக்கிறது.
கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியில் சஞ்சயின் கை ரேகை இருக்க அவனை கைது செய்து அழைத்து செய்யும் வழியில் அவன் தப்பிவிட , அவனை போலிஸ் துரத்தும் அதே சமயத்தில் அவனது நண்பனும் கொலையாகிறான். சில திருப்பங்களுக்கு பிறகு சஞ்சயின் மேனேஜரும் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஷில்பாவும் தான் கொலையின் சூத்திரதாரிகள் என கைது செய்யப்படுகின்றனர்.
படம் அத்துடன் முடியவில்லை..இறுதியில் ஒரு சின்னத் திருப்பம் . அதையும் எழுதினால் படம் பார்ப்பது ப்ரயோஜனமில்லை. அதை அமேசான் ப்ரைமில் பார்க்கவும்
அவரவர் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர். தேவையில்லாத காட்சிகள் அதிகம் இல்லை. குறிப்பாய் நகைச்சுவை என எந்த அபத்தமும் படத்தில் இல்லை. அதே போன்று பிளாஷ்பேக்கில் வரும் பாட்டுகளையும் தவிர்த்திருக்கலாம். நேர்த்தியான படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.
பார்த்துடுவோம்…
பார்த்து விட்டேன். போலீஸ்காரர் செல்போனை நண்பனை எபப்டிக் பிடித்தார் என்று காட்டவில்லை. ஆனாலும் சுவையான திருப்பம். இவ்வளவு அப்பாவியா இருக்கானே என்று சத்யா சொல்லும்போதே ஏதோ இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது!