உண்மையில் இப்பொழுது இருக்கும் ஜிமெயில் லே அவுட்டில் இனி பெரிதாக மாற்றம் செய்ய இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்பொழுது இருப்பது அனைவருக்கும் பழகிய அறிமுகமான ஒன்று. அதுவும் இல்லாமல் அதில் இனி மாற்றம் எதுவும் பெரியதாய் செய்ய இயலாது என்பது எனது நம்பிக்கை. ஆனால் ஆங்காங்கே சில சில சிறிய மாற்றங்களை செய்து கொண்டேதான் இருப்பார்கள். அதனால் தினசரி உபயோகிப்பாளர்கள் எந்த அளவிற்கு உபயோகம் அடைவார்கள் என தெரியவில்லை. இன்று அப்படிதான் Gmail Desktop லே அவுட்டில் சிறிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளனர்.
அதாவது முன்பு Gmail Desktop பதிப்பில் இடது பக்கம், வரிசையாக மெயில் போல்டர்களான இன்பாக்ஸ், டிராப்ட், ஸ்பேம், பின் போன்றவை இருக்கும். அதன் கீழே “Chats” பின் அதன் கீழே “Spaces” என்று இருந்தது. இதை இப்பொழுது மாற்றி இருக்கிறார்கள். எப்படி எங்கே மாற்றி இருக்கிறார்கள் ? இப்பொழுது கீழே இருப்பதை, இடது பக்கம் போல்டர் லிஸ்டிற்கு முன்னால் கொண்டு சென்றுள்ளனர். இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஒரு உபயோகம் உள்ளது.
முன்பு போல் அவை எப்பொழுதும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே இருக்கும் ஹம்பர்கர் மெனு மூலம், மெயில், சாட், ஸ்பேஸ் என்ற சிறு மெனுவை மறைத்து வைத்துக் கொள்ளலாம். சாட் விண்டோ போக வேண்டிய சமயத்தில் மட்டும் அந்த மெனுவை ஓபன் செய்து செல்லலாம். மற்றபடி இதனால் என்ன பயன் என கூகிள்தான் சொல்ல வேண்டும்.
அதேபோல் இந்த லே அவுட் மாற்றத்தை கூகிள் க்ரோமில் உபயோகிக்கும் பொழுது மட்டுமே பார்த்தேன். அதே மெயில் ஐடியை எட்ஜ் பிரவுசரில் ஓபன் செய்த பொழுது பழைய லே அவுட்டே காட்டுகிறது. அதில் இன்னும் அப்டேட் ஆகவில்லை போல. என்னுடைய இரண்டு மெயில் ஐடிகளில் ஒரு ஐடிக்கு இந்த லே அவுட் மாற்றம் வேலை செய்கிறது மற்றொன்றில் வேலை செய்யவில்லை. எந்த அளவீட்டில் அப்டேட் செய்கிறார்கள் ? எந்த வருடம் துவங்கியது என்பதை பொருத்தா என்று தெரியவில்லை
இதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே
இப்பொழுது இருக்கும் லே அவுட்
புதிய Gmail Desktop லே அவுட்