நீங்கள் உங்கள் மடிக்கணினி அல்லது டெஸ்க் டாப் கணிணியில் க்ரோம் பிரவுசரை உபயோகிப்பவரா ? ஆம் என்றால் உங்கள் பிரவுசரை(Chrome update) உடனடியாக அப்டேட் செய்யவும். நாம் பொதுவாக மொபைலில் இருக்கும் செயலிகளை உடனடியாக அப்டேட் செய்து விடுகிறோம். ஆனால் கணிணியில் இருக்கும் மென்பொருட்களை அப்டேட் செய்வதில் அலட்சியம் காட்டுகிறோம்.
க்ரோம் பிரவுசரின் லேட்டஸ்ட் அப்டேட் Version 80.0.3987.122 (Official Build) (64-bit). இதற்கு கீழுள்ள வெர்சன் உபயோகித்தால் நீங்கள் உங்கள் பிரவுசரை அப்டேட் செய்வது அவசியம். க்ரோம் அப்டேட் செய்வது மிக எளிது.
மெனுவில் help என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இதன் பின் about கூகிள் க்ரோம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் அதுவே என்ன வெர்ஷன் என்று பார்த்து அப்டேட் செய்துவிடும். அப்டேட் செய்த பிறகு பிரவுசரை ரீ ஸ்டார்ட் செய்யவும்.