Clubhouse Android Version Launched

பொதுவாய் சமூக வலைத்தளங்கள் எல்லாமே எழுதுவது அல்லது வீடியோ சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. இந்த நிலை கடந்த வருடம் மாறியது. Clubhouse என்ற செயலி ஐஓஎஸ்ஸில் வெளியிடப்பட்டது. இது முழுக்க முழுக்க பேச்சு அடிப்படையிலானது. அதுவரை நீங்கள் குரல் பதிவு செய்யவேண்டுமென்றால் வேறு ஏதாவது ஒரு செயலியில் பதிந்து அதை பேஸ்புக் அல்லது ட்விட்டரில் பதியவேண்டும். ஆனால் இந்த செயலியில் நேரடியாக குரல் பதிவுகள் செய்ய முடியும். இது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் இதில் நுழைய இன்விடேஷன் வேண்டும்.

ஐஓஎஸ் செயலி பெற்ற வரவேற்பை தொடர்ந்து Clubhouse Android Version உருவாக்கி கொண்டிருந்தனர். நேற்று இதன் ஆன்ட்ராய்ட் செயலி ( பீட்டா) வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுதைக்கு அமெரிக்காவில் இருப்பவர்கள் மட்டுமே இதை இன்ஸ்டால் செய்ய இயலும். மற்ற நாட்டில் இருப்பவர்கள், இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆண்டிராய்ட் செயலியும் இன்விடேஷன் பொறுத்தே. இப்பொழுது நீங்கள் Clubhouse Android Version கு பதிவு செய்து காத்திருக்கலாம்.

இதற்கு ஆண்டிராய்டில் எப்படி வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை. ஏனெனில் இப்பொழுது ட்விட்டரும் இது போன்ற ஒரு வசதியை கொண்டு வந்துவிட்டது. அதேபோல், பேஸ்புக்கும் விரைவில் குரல் பதிவுகளை கொண்டுவரவுள்ளது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

About Author