கூகிள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசானின் அலெக்ஸ்சா போன்றது மைக்ரோசாப்ட்டின் Cortana. கூகிள் அஸிஸ்டன்டுக்கு ஒரு மாற்றாக இதை உருவாக்கியது அந்நிறுவனம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த செயலி வளர்ச்சி அடையவில்லை. எனவே ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ ஓ எஸ் ற்கான செயலிகளை இன்றுடன் நிறுத்திக் கொள்கிறது அந்நிறுவனம்.
இதற்கு பதிலாக மைக்ரோசாப்ட்டின் to-do list செயலியை உபயோகப்படுத்தி தங்களது செய்ய வேண்டிய செயல்களுக்கு ரிமைண்டர் வைத்துக்கொள்ளலாம். இந்த செயலி முற்றிலுமாக கைவிடப்படவில்லை. Office 365 உபயோகிப்பாளர்களுக்கு இந்த செயலி தொடர்ந்து வேலை செய்யும். அதாவது சாதாரண பயனாளர்களுக்கு என்று இருந்த செயலி இனி வேலை சார்ந்து உபயோகம் செய்பவர்களுக்கு மட்டுமே.
உண்மையில் கூகிள் அசிஸ்டன்ட் மொபைலுடன் இணைந்து வேலை செய்வது இரண்டாவது அதில் கூகிளின் தொடர்ந்த அப்டேட்கள் மேம்படுத்துதல் என பல காரணிகளால் முன்னணியில் இருப்பது. எனவே அதை மாற்றி வேறு ஒரு செயலி அங்கே அந்த இடத்தை பிடிப்பது கடினமே. இதேதான் ஐ ஓ எஸ் ஸிலும். இதை தாமதமாக புரிந்து கொண்டது மைக்ரோசாப்ட்.
Cortana விற்கு டாட்டா !!!!