CovidLock : Ransomeware affecting android mobile

Covidlock

COVID-19 வைரஸ் தொற்றுதலை தொடர்ந்து இப்பொழுது அதே பேரில் ஆண்டிராய்டு மொபைல்களை தாக்கும் வைரஸ். CovidLock என பெயரிடப்பட்டுள்ள இந்த ரேன்சம்வேர் இப்பொழுது புதிதாய் நுழைந்திருக்கும் ஒன்று. எப்பொழுதெல்லாம் உலகில் மிக பரபரப்பான நிகழ்வுகள் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் அந்த நிகழ்வின் பெயரை விட்டது புதிய இணையத்தள முகவரிகள் புக் செய்யப்படும். இவ்வாறு புக் செய்யப்படும் முகவரிகளில் 90% ஏமாற்று வேலைகளுக்காக செய்யப்படுபவையாக இருக்கும்.

எவ்விதம் செயல்படுகிறது

Domaintools என்ற இணையத்தளம்தான் இந்த ஏமாற்று வேலையை கண்டுபிடித்துள்ளது. இப்பொழுது Corona வைரஸ் பற்றியும் அது தாக்கியுள்ள இடங்களை பற்றியும் அதிகமான மக்கள் இணையத்தில் தேடுகின்றனர். அப்படி தேடும் பொழுது (coronavirusapp[.]site) என்ற இணையதளம் உங்கள் அருகில் Corona வைரஸால் பாதியாக்கப்பட்டுள்வர்கள் உள்ளனரா என சொல்வதாக சொல்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் லொகேஷன் அனுமதி கொடுத்தால் முடிந்தது கதை. உங்கள் மொபைல் கண்ட்ரோல் உங்களிடம் இருந்து அவர்களிடம் சென்று விடும்.

இந்த ரேன்சம்வேர் CovidLock முதலில் செய்வது உங்கள் மொபைலின் லாக் ஸ்க்ரீன் பாஸ்வேர்டை மாற்றுவது. இதன்பின் நீங்கள் உங்கள் மொபைலை உபயோகிக்கமுடியாது. $100 மதிப்புள்ள பிட்காயின்களை அவர்கள் சொல்லும் பிட்காயின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்ப மறுப்பவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் சொல்வது

CovidLock
https://www.domaintools.com/

Use known secured websites

எனவே நீங்கள் எந்த வெப்சைட்டை உபயோகிக்கறீர்கள் என்று பார்த்து உபயோகிக்கவும். உலக அளவிலான கொரோனா தொற்று பற்றி அறிய bing.com/covid என்ற இணையதளத்தை உபயோகப்படுத்தவும். இது மைக்ரோசாப்ட்டின் தளம். எனவே பாதுகாப்பானது.

செய்தியின் மூலம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.