ஒரு மாதம் முன்பு நாம் கூறியபடி இப்பொழுது Cross Platform messaging உபயோகத்திற்கு வந்துள்ளது. இது சாதாரண பயனாளருக்கு எந்த விதத்தில் உபயோகம் ஆகும் என்று தெரியவில்லை. ஏனென்றால் பலரும் மெஸெஞ்சரை தொல்லையாகத்தான் கருதுகின்றனர். ஆனால் அதிகம் மெசெஞ்சர் உபயோகம் செய்பவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.
இந்த அப்டேட் இன்ஸ்டாக்ராமில் இருந்து பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு நேரடியாக இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பலாம். இதற்காக மெஸெஞ்சரை ஓபன் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பேஸ்புக் மெசெஞ்சரில் இருந்து இன்ஸ்டாக்ராம் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். இந்த வசதி தேவை இல்லை என்றால் “not now ” தேர்வு செய்யவும்.
Cross Platform messaging மூலம் யார் உங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை வழக்கமான மெசேஜ் செட்டிங் மூலம் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். கீழே இரண்டு செயலிகளில் இருந்தும் ஸ்க்ரீன்ஷாட் .