ஏற்கனவே பல ஆன்ட்ராய்ட் செயலிகள் “Dark Mode ” வசதி கொண்டுவந்து விட்டன. பேஸ்புக் மெசெஞ்சர் செயலியிலும் இந்த வசதி வந்துவிட்டது. இந்நிலையில் சில மாதங்கள் முன்பு பேஸ்புக் வெப் இன்டர்பேஸில் “Dark Mode ” வசதி வந்தது. இப்பொழுது ஆன்ட்ராய்ட் செயலிக்கும் இந்த வசதி வந்துள்ளது.
Enabling Dark Mode
இந்த வசதியை எப்படி செயல்படுத்துவது என பார்ப்போம்.
- உங்கள் ஆன்ட்ராய்ட் பேஸ்புக் செயலியில் வலது மூலையில் இருக்கும் மூன்று கோடுகளை தொடவும்.
- பின் “settings & Privacy ” என்ற ஆப்ஷனை தொடவும்
- அதன் கீழ் “Dark Mode ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது “Dark Mode ” on / off ஆப்ஷன் வரும். அதில் தேர்வு செய்து கொள்ளலாம்.