Digiboxx – Review

போன வாரம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் “Digiboxx” என்ற கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த துறையில் களமிறங்கும் முதல் இந்திய ஸ்டார்ட் அப் இது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. முதல் இருநாட்கள் பாஸ்வேர்ட் பெறுவதற்கும் ரிஜிஸ்டர்ட் செய்வதற்கும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. அதன்பின் இன்றுவரை பிரச்சனை இன்றி வேலை செய்கிறது.

இதை கணிணி / ஆன்ட்ராய்ட் மொபைல் / ஐபோன் என மூன்றிலிருந்தும் உபயோகிக்க இயலும். இதில் நான்கு பயனர் திட்டங்கள் உள்ளன. முதலில் இலவச உபயோகம். இதை யார் வேண்டுமானாலும் பெறலாம். 20 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து லிங்க் எங்குவேண்டுமானாலும் பகிரலாம். இன்னும் ஜிமெயில் இணைப்பு கொடுக்கவில்லை. 2 ஜிபி பைல் வரை அப்லோட் செய்யலாம்.

அடுத்தது பிரீலேன்சர்களுக்கு 10 டிபி வரை ஸ்டோரேஜ் வசதி உண்டு. 10 ஜிபி பைல் வரை அப்லோட் செய்ய முடியும். நிறுவனங்களுக்கான திட்டம் மற்றும் உங்களுக்கென பிரத்யேக திட்டம் வேண்டுமென்றால் இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.

இதை உபயோகிப்பது எளிது என்பதால் அதை பற்றி பெரிதாய் எழுதவில்லை. சில ஸ்க்ரீன் ஷாட் கீழே இணைத்துள்ளேன்.

இதன் நிறைகள்

  1. 20 ஜிபி என்பது இலவச உபயோகத்திற்கு மிக அதிகமான இடம். இந்த 20 ஜிபி முழுவதும் கோப்புகள் / படங்களை வைத்துக் கொள்ளலாம். ஜிமெயிலில் உங்கள் மெயில் + கூகிள் போட்டோஸ் + கோப்புகள் என்பதை மறக்கவேண்டாம்.
  2. இதன் UI மிக எளிதாக உள்ளது. அதிகம் மெனெக்கெட்டு கற்றுக் கொள்ளவேண்டாம். கிட்டத்தட்ட கூகிள் ட்ரைவ் மாதிரிதான் உள்ளது.
  3. இப்பொழுதைக்கு வேகமாய் உள்ளது.

குறைகள்

  1. நேரடியாய் சோஷியல் மீடியாவில் பகிரும் வசதி இல்லை.
  2. லிங்கை காப்பி செய்து பகிர வேண்டியுள்ளது. இது சிலருக்கு குறையாய் படலாம்.
  3. இலவச உபயோகத்திற்கு பதிவு செய்யும் பொழுது வீடு முகவரி கேட்பதெல்லாம் மிக அதிகம். அதை தவிர்த்திருக்கலாம்.

கண்டிப்பாய் அனைவருக்கும் உபயோகம் ஆகும் ஒரு சேவை. இதில் இறங்கியிருக்கும் இந்திய நிறுவனத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

About Author

One Reply to “Digiboxx – Review”

Comments are closed.