Downvote

Downvote feature introduced in Twitter

வழக்கம் போல் புதியதாய் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். ஏற்கனவே நீங்கள் போடும் டிவீட்ஸ்க்கு வரும் பதில் டிவீட்ஸ்க்கு லைக் போடும் வசதி உள்ளது. பேஸ்புக்கில் இருக்குமளவிற்கு ரியாக்ஷன் வசதி இல்லை இருந்தாலும் லைக் வசதி மட்டும் உண்டு. இப்பொழுது புதிதாய் “ Downvote “ என்ற புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி என்ன , எப்படி உபயோகிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Downvote

நீங்கள் ஒரு ரிப்ளைக்கு டௌன் வோட் அளித்தால் அது உங்களுக்கு மட்டுமே காட்டும். அந்த ரிப்ளை ட்வீட் போட்டவருக்கு இதுகுறித்து எந்த வித அறிவிப்பும் செல்லாது. இப்பொழுது இது முழுக்க முழுக்க ட்விட்டரின் அனலைஸ் முடிவுகளுக்கு மட்டுமே உபயோகப்படுகிறது. அதாவது ஒரு ரிப்ளை அதிக டவுன் வோட்டுக்கள் பெற்றால் அது அல்லது அந்த ட்வீட் போட்டவரின் மற்ற டிவீட்கள் அதிகம் மற்றவர்களுக்கு காட்டப்பபடாமல் போகலாம். இதை எவ்விதம் ட்விட்டர் உபயோகிக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு வகையில் இது வசதிதான். பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் பிடிக்கவில்லை எனில் “Angry” ரியாக்ஷன் தர இயலும். அதன் மூலம் நமது அதிருப்தியை வெளியிடலாம். ட்விட்டரில் இதுவரை அத்தகைய வசதி இல்லை. இப்பொழுதுதான் கொண்டுவந்துள்ளனர். இது ஒரு நல்ல முன்னேற்றம்.

கீழே இரண்டு திரை சொட்டுகள்

Downvote
Downvote

Feature availability

இந்த வசதி அனைவருக்கும் வந்துள்ளதா என்பது சந்தேகமே . நான் இரண்டு ட்விட்டர் ஐடி வைத்துள்ளேன். ஒன்று பொதுவானது அடுத்தது இந்த இதழின் பதிவுகளை பகிர. இதில் ஒரு ஐடிக்கு மட்டுமே இந்த வசதி வந்துள்ளது. மற்ற ஐடியில் வரவில்லை. அதே போல் கணிணியிலும் இந்த வசதி வரவில்லை. ட்விட்டரின் ஆண்டராய்டுக்கான செயலியில் ( பீட்டா ) இதை நான் உபயோகப்படுத்தி பார்த்தேன்.

About Author