KB5010414

Windows 11 KB5010414  & New notepad and Media player to all users

Windows 11 KB5010414

மைக்ரோசாஃப்ட் வழக்கமாய் கொடுக்கும் அப்டேட்டின் சமீபத்திய பதிப்பு KB5010414. இது பீட்டா பதிப்பை உபயோகிப்பவர்களுக்கானது அல்ல. மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 11 இயங்குதளத்தை உபயோகிக்கும் அனைத்து பொது உபயோகிப்பாளர்களுக்கானது. இதில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் உள்ளன.

  1. Android apps rolling out via Microsoft Store.
  2. Taskbar can now display clock on multiple monitors.
  3. Easily toggle mic from taskbar and share app’s window in Teams.
  4. Taskbar can now display weather information.
  5. Start menu’s recommended section gets Office web integration

இந்த 5 புதிய வசதிகளில் , நான்காவது விஷயம் மட்டுமே நான் சோதித்து பார்த்தேன். ஒன்றுக்கும் மேற்பட்ட திரை வசதி / டீம்ஸ் செயலி இரண்டையும் சோதிக்க இயலாது. ஆண்டிராய்டு செயலிகள் இன்னும் சிறிது நாள் கழித்துதான் சோதிக்கணும். எனவே இப்பொழுது நான்காவது விஷயத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஏற்கனவே விண்டோஸ் 11 அறிமுகப் பதிவுகளில் கூறியிருந்தவாறு விண்டோஸ் 11ல் விட்ஜெட்ஸ் வசதி உள்ளது. அதில் விண்டோஸ் நியூஸ், To-do பட்டியல் மற்றும் நீங்கள் இருக்கும் நகரத்தின் வெதர் பற்றிய விஷயங்கள் இருக்கும். இப்பொழுது அதில் ஒரு சிறு மாற்றம் செய்துள்ளனர். டாஸ்க் பாரில் இருக்கக்கூடிய விஷயங்களில் நீங்கள் விட்ஜெட்ஸ் என்பதை தேர்வு செய்திருந்தீர்கள் எனில், உங்கள் விண்டோஸ் 11 கணிணி திரையில் இடது பக்கம் கீழே இப்பொழுது வெதர் ஐகான் காட்டும். அதன் மேல் மவுஸ் கர்சரை வைத்தால் விண்டோஸ் 11 விட்ஜெட்ஸ் Fly out மெனுவாக துவங்கும். இதன் திரை சொட்டுகள் கீழே.

Windows 11 weather Widget

KB5010414
KB5010414

windows 11ல் ஏற்கனவே பல விண்டோஸ் பதிவுகளிலும் மாறாமல் இருந்து வந்த நோட்பேட் மற்றும் மீடியா பிளேயர் இரண்டையும் மாற்றியுள்ளனர். நோட்பேட் செயலியில் டார்க் மோட் ஏற்கனவே பீட்டா சோதனையாளர்களுக்கு வந்துவிட்டது. இப்பொழுது விண்டோஸ் 11 பொது உபயோகிப்பாளர்களுக்கும் ரிலீஸ் செய்துள்ளனர். நீங்கள் விண்டோஸ் 11 Build 22000.346 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பை உபயோகித்துக் கொண்டிருந்தால் விண்டோஸ் ஸ்டோர் சென்று அங்கிருந்து புதிய நோட்பேட் மற்றும் மீடியா பிளேயரை அப்டேட் செய்துகொள்ளலாம்.

இந்த மீடியா பிளேயர் ஏற்கனவே இருக்கும் க்ரூவ் பிளேயருக்கு மாற்றாக வந்துள்ளது. பழைய மீடியா பிளேயர் அப்படியே இருக்கும். அதில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை. நோட்பேட் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவு கீழே

புதிய நோட்பேட் & மீடியா பிளேயர் திரை சொட்டுகள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.