ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களின் வாழும் கலை நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட Elyments App பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றிற்கு பதில் சொல்லும் பொருட்டு இந்த பதிவு. நானும் உங்களில் அநேகரை போலத்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு எதேச்சையாய் கண்ணில் பட்டு இன்ஸ்டால் செய்தேன். இதை அவர்கள் ஒரு சோஷியல் மீடியா செயலியாக மட்டும் உருவாக்கவில்லை. அவர்களின் நோக்கம் இதை ஒரு சூப்பர் ஆப் (super app )ஆக கொண்டு வரவேண்டும் என்பதே
super app என்பதற்கு ஒரு உதாரணம் தரவேண்டுமென்றால் சீன செயலியான we chat செயலியை சொல்லலாம். அந்த செயலியில் இருந்து வெளியே செல்லாமல், பணம் அனுப்புவது, பொருட்கள் வாங்குவது என்று பல செயல்களை செய்ய முடியும். இந்த மாதிரி ஒரு இந்திய செயலியை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். சோஷியல் மீடியா செயலியாகவும் இருக்கும் அதே சமயத்தில் மற்ற வேலைகளையும் செய்து கொள்ளலாம்.
பலரும் கேட்கும் முதல் கேள்வி . பாதுகாப்பானதா ? இந்த கேள்விக்கு சரியான விடை இந்த ஆரம்பகட்டத்தில் சொல்லஇயலாது. இப்பொழுதைக்கு ஒரே ஒரு ப்ரொபைல் படம் மட்டும் பதிவேற்றம் செய்து வேறு எந்த தனிப்பட்ட தகவல்களையும் தராமல் தவிர்க்கலாம்.
அடுத்தது பேஸ்புக் போல இல்லை. கண்டிப்பாக அந்த இடத்திற்கு வர நாட்கள் பிடிக்கும். ஆர்குட் என்ற தளம்தான் சமூக வலைத்தளங்கள் எனப்படும் சோஷியல் மீடியாவிற்கு பெரியண்ணன். அதன் பின் தான் பேஸ்புக் வந்தது. அப்பொழுதும் இதே பேச்சுதான். பேஸ்புக்கில் ஆரம்பத்தில் பார்ம் வில்லா கேம் விளையாடியவர்களே அதிகம். பின்புதான் ஒவ்வொரு வசதியாக வந்தது. இன்று வளர்ந்து நிற்கும் அசுரனாய் தெரிகிறது.
Elyments செயலியில் அவர்கள் ட்விட்டர் + பேஸ்புக் + வாட்ஸ் அப் என மூன்று வசதிகளையும் இணைத்து தர முயன்றுள்ளனர். இப்பொழுதைக்கு ட்விட்டரில் இருப்பது போல் ஒரே ஒரு ரியாக்சன் எமோஜி மட்டுமே கொடுத்துள்ளனர். அதே போல் கமென்டிற்கு ரியாக்ட் செய்ய முடியவில்லை.
பதிவை எடிட் செய்ய முடிகின்ற அதே நேரத்தில், அதற்கு வரும் கமெண்ட்களுக்கு சொல்கின்ற பதில்களை எடிட் செய்யும் வசதியோ டெலிட் செய்யும் வசதியோ இல்லை. அதே போல் கமெண்ட்களுக்கு ரியாக்ஷன் எமோஜி கிடையாது. இதுவரை க்ரூப் அல்லது தனி பக்கம் உருவாக்கும் வசதியும் வரவில்லை.
சில நேரங்களில் மிக மெதுவாக உள்ளது. அதேபோல் நபர்களை தேடி கண்டுபிடிப்பதும் கடினமாய் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அங்கிருந்து பேஸ்புக்கிற்கு ஷேர் செய்தால் சரியாக வரவில்லை. ஆனால் வாட்ஸ் அப்பிற்கு பகிர முடிகிறது.
பல விஷயங்கள் குறித்து இரண்டு நாட்களாய் development team க்கு feedback கொடுத்துள்ளேன். சரி செய்வார்கள் என நம்புகிறேன். பார்ப்போம்