வலதுசாரி சிந்தனையாளர்களின் ப்ரோபைல்களை முடக்கும் பேஸ்புக் மற்றும் ட்வீட்டரின் செயல்களால் பலரும் இந்தியாவிற்கென்று தனியாக சோஷியல் மீடியா வேண்டுமென்று பலகாலமாய் சொல்லி வந்தனர். இப்பொழுது அதற்கு விடிவு வந்திருக்கிறது. வாழும் கலை அமைப்பின் சார்பில் “Elyments” என்ற சோஷியல் மீடியா செயலி வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுதைக்கு மொபைல் செயலி மூலம் மட்டுமே இது செயல்படுகிறது. கணிணியில் இதற்கு தனியாக தளம் இருப்பதாக தெரியவில்லை. ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன் இரண்டிற்குமே செயலிகள் உள்ளன.
இதில் இணைவது மிக எளிது. உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் ஒடிபி வருகிறது. அதை நிரப்பிய பின் உங்கள் பெயர் புகைப்படம் பதிவேற்றி நேரடியாக பதிவிட சென்றுவிடலாம்.
கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே இருப்பதால் பதிவிடுவது பற்றியெல்லாம் பிரச்சனை அல்ல. இங்கு எப்படி இயங்குவீர்களோ அதேபோல் எழுதலாம். ஆனால் அங்கு #hashtag வசதி உள்ளது. இது நமக்கு உதவியாக இருக்கலாம். அதிக பாப்புலர் ஆன பின்புதான் இதில் ஏதாவது கட்டுப்பாடு வருமா என பார்க்கவேண்டும்.
இதில் இருப்பது போலவே நேரடியாக லைவ் வீடியோ போடலாம். ஸ்டோரியும் உண்டு. இன்பாக்ஸ் கிட்டத்தட்ட வாட்ஸ் அப் ஸ்க்ரீன் போல் இருக்கிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஸ்பெயினில் உங்கள் மொழியை தேர்வு செய்துகொள்ளும் வசதி உண்டு.
பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிதானமாய் பார்த்து அதற்கு தனியாக பதிவு போடுகிறேன்.
இந்த செயலியை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்