Expiring media & 24 hrs option for disappearing messages

வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கனவே “disappearing messages” வசதியை அளித்துள்ளது. அதே போல் புதிதாய் மற்றுமொரு வசதி வர உள்ளது. அது “Expiring media” . அதாவது நீங்கள் அனுப்பும் போட்டோ / வீடியோவை ஒரு முறை மட்டுமே மற்றவர்கள் பார்க்க இயலும். அதன்பின் அது டெலிட் ஆகி விடும் என்று சொல்கிறார்கள். ஒருமுறை பார்த்தவுடன் டெலிட் ஆகிவிடும். ஆனால் ஸ்க்ரீன்ஷாட் எடுத்தாலோ அல்லது வீடியோ ரிக்கார்ட் செய்தாலோ ஒன்றும் செய்ய இயலாது. இந்த வசதி இன்னும் சோதனையில்தான் உள்ளது. அப்டேட் ரிலீஸ் ஆனவுடன் அறிவிக்கப்படும்.

எப்படி இருக்கும் Expiring media வசதி ?

24 hrs option for disappearing messages

இது அனைத்து பயனாளர்களுமே உபயோகப்படுத்த முடியும். ஆனால் இப்பொழுது அதில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே உள்ளது. அதாவது மெசேஜ் அனுப்பியதில் இருந்து ஒரு வாரம் / 7 நாள் கழித்து அந்த மெசேஜ் அழிவது போல் செட் செய்ய முடியும். இப்பொழுது அதை மாற்றி ஒரே நாளில் / 24 மணி நேரத்தில் அழிவது போலும் மாற்றிக் கொள்ள இயலும். இந்த வசதி இப்பொழுது சோதனையில் இருக்கிறது. விரைவில் அனைவருக்கும் அப்டேட் செய்யப்படலாம்.

Expiring Media
PC: https://wabetainfo.com/

About Author