” Twitter Spaces “ என்பது ட்விட்டரில் டெக்ஸ்ட் சாட் செய்யாமல் , குரல் வழி சாட் செய்யும் வசதி. கிளப் ஹவுஸ் ஆடியோ செயலி வந்த பிறகு தங்களின் முக்கியத்துவம் குறைந்து விடக் கூடாது என ட்விட்டர் கொண்டு வந்தது புதிய வசதி. இந்த ஸ்பேசஸ் மூலம், உங்கள் நண்பர்களுடன் இணைந்து குரல் வழி சாட் செய்யலாம் அல்லது நீங்கள் எக்ஸ்பர்ட் எனில் உங்கள் கருத்துகளை சொல்லலாம். அதற்கு உங்களை பின்பற்றுபவர்களையோ மற்றவர்களையோ அழைக்கலாம். இன்னும் நீங்கள் பிரபலமாக இருந்தால் , நீங்கள் நடத்தும் ஸ்பேஸில் மற்றவர்கள் கலந்து கொள்ள கட்டணம் வசூலிக்கலாம். அதில் ஒரு பகுதி ட்விட்டருக்கு செல்லும். ஆனால் இதற்கு நீங்கள் 1000 பாலோவர் வைத்திருக்கணும். கடந்த 30 நாட்களில் மூன்று ஸ்பேஸ் நடத்தி இருக்கணும். இதுதான் விதிமுறை. இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்ததே.
பொதுவாய் ” twitter spaces” ஓபன் செய்வது என்பது எளிது. உங்கள் ஆண்டிராய்டு ட்விட்டர் செயலியில் நுழைந்தவுடன் நீங்கள் பின்தொடர்பவர்கள் யாரவது ஸ்பேஸ் ஹோஸ்ட் செய்தால் உங்கள் செயலியில் மேலே வரும். அதில் நீங்கள் கலந்து கொள்ளமுடியும். ஆனால் நீங்கள் பின்தொடராத நபர்கள் நடத்தும் ஸ்பேசில் நீங்கள் பங்குபெற வேண்டுமென்றால் அந்த லிங்க் இருந்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. இப்பொழுது இதை மாற்றி இருக்கிறார்கள்.
இப்பொழுது ட்விட்டர் செயலியில் நுழைந்தவுடன் வழக்கம்போல் மேல் பகுதியில் நீங்கள் பின்பற்றுபவர்கள் நடத்தும் ஸ்பேஸ் காட்டும். அதே போல் கீழே நடுவில் புதிதாய் ஒரு “ஐகான்” வந்திருக்கும். அதை டச் செய்தால் அப்பொழுது லைவ் கொண்டிருக்கும் ட்விட்டர் ஸ்பேசஸ் பற்றிய தகவல் காட்டும். உங்களுக்கு எந்த ஸ்பேஸில் கலந்து கொள்ள வேண்டுமோ அதை க்ளிக் செய்து கலந்து கொள்ளலாம். நீங்கள் புதிதாய் ஸ்பேஸ் ஹோஸ்ட் செய்ய வலது பக்கம் கீழே இருக்கும் அந்த நீல நிற ஐக்கானை டச் செய்தால் போதும்.
இனி வரும்காலத்தில் இது போன்ற குரல் வழி சமூக வலைத்தளங்களே பிரபலமாகும்.