பல்வேறு இணைய தளங்களில் அடோப் கம்பெனியின் Flash Player உபயோகப்படுத்தப்பட்டது. குறிப்பாய் வீடியோ , கேம், அனிமேஷன் போன்றவற்றை உபயோகிக்க இந்த தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்பட்டது. 2014ல் கிட்டத்தட்ட 80% தளங்களில் (சராசரியாக) உபயோகப்பட்ட இந்த தொழில்நுட்பம் 2017ல் 17% குறைந்து தொடர்ந்து வீழ்ச்சியடைய துவங்கியது.
உபயோகிப்பாளர்கள் குறைந்தால் அதற்கு தரப்படும் சப்போர்ட் குறையும். அதேதான் இந்த விஷயத்திலும் நடந்தது / நடக்கிறது. கடந்த சில வருடங்களாகவே பிளாஷ் பிளேயர் இருக்கும் தளங்களை ஓபன் செய்தால் ஒரு மெஸேஜ் வரும். பிளாஷ் பிளேயரை உபயோகிக்க உங்கள் அனுமதி கேக்கும். இதன் பின் அடுத்த கட்டமாய் இந்த வருட இறுதிக்கு பின் , க்ரோம் ப்ரவுசர்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யாது.
இதனால் உபயோகிப்பாளர்களுக்கு நேரடியாய் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் பெரும்பாலான தளங்கள் அடுத்த தொழில்நுட்பத்திற்கு மாறி விட்டன. ஆனால் இன்னும் சில தளங்கள் மாறவில்லை. நீங்கள் டெவெலப்பராய் இருப்பின் நீங்கள் உருவாக்கும் தளங்களில் இனி Flash Player உபயோகிக்க வேண்டாம்.