Google Music நம்மில் பலரும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் செயலி. இதனை உபயோகித்து பல பாடல்கள் கேட்டிருப்போம். இந்த செயலியை அக்டோபர் மாதத்திற்கு பிறகு உலகம் முழுவதும் யாரும் உபயோகப்படுத்த இயலாது. அக்டோபர் மாத உறுதியோடு இதன் பயன்பாடு முழுவதும் நிறுத்தப்படுகிறது. பயப்பட வேண்டாம். ஏற்கனவே கூகிள் நிறுவனம் யூடியூப் ம்யூஸிக் என்ற புதிய செயலியை கொண்டு வந்துள்ளதால் இந்த செயலி நிறுத்தப்படுகிறது. எனவே நீங்கள் தொடர்ந்து உங்கள் அபிமான பாடல்களை கேட்கலாம்.
எந்தெந்த சேவைகள் நிறுத்தப்படுகிறது ?
Google Music – செப்டம்பரில் துவங்கி டிசம்பரில் முழுவதும் நிறுத்தப்படும்
Music store – கூகிள் ப்ளே ஸ்டோரில் இதன் மூலம் இனி நீங்கள் பாடல்கள் வாங்க இயலாது.
Music Manager – இதுவும் ஆகஸ்டுடன் நிறுத்தப்படும்
ஏற்கனவே google music மூலம் நீங்கள் பாடல்கள் / ஆல்பம்கள் வாங்கியிருந்தால் அவற்றை நீங்கள் மாற்றிக்கொள்ள வருட இறுதி வரை நேரம் உள்ளது. நீங்கள் அவற்றை இரண்டு விதமாக கூகிள் மியூஸிக்கில் இருந்து மாற்றிக் கொள்ளலாம்.

- அவற்றை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய தளம் google Take out
- கூகிள் ம்யூசிக்கில் இருந்து யூடியூப் மியூசிக் சேவைக்கு மாற்ற விரும்பினால் செல்ல வேண்டிய தளம் Youtube Music
நீங்கள் கூகிள் ம்யூசிக்கில் பணம் கொடுத்து உபயோகிக்கும் பயனாளரெனில் மேலே சொல்லப்பட்டிருக்கும் முறையில் உங்களுடைய மாதாந்திர சந்தா முறையை யுடியூபிற்கு மாற்றிக் கொள்ள இயலும். ஆனால் யு டியூப் ம்யூசிக்கில் தனிப்பட்ட பாடல்களையோ ஆல்பம்களையோ நீங்கள் பணம் செலுத்தி வாங்க இயலாது.
tamiltechportal டெலிகிராம் சேனலில் இணைய
இந்த தளத்தில் விளம்பரம் செய்ய மெயில் அனுப்பவும் sales@cswebservices.in