How to avoid Malware apps

ஆன்ட்ராய்ட் மற்றும் ஐ ஓஸ் இயங்குதளங்களுக்காக பல்வேறு செயலிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியவை. இதில் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு செயலியை லிஸ்ட் செய்வது கடினமான ஒன்று. பல்வேறு சோதனைகளுக்கு பிறகே அனுமதி கிடைக்கும். ஆனால் ப்ளே ஸ்டோரில் அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை. எனவே எதோ ஒரு வழியில் Malware apps உள்ளே நுழைந்து விடுகின்றன.

Avoid Malware Apps

எப்படி நம் மொபைலை இத்தகைய செயலிகளில் இருந்து காப்பது என்பது அனைவரின் முன் இருக்கும் ஒரு கேள்வி.

  1. Download only from Playstore

ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோடு செய்யவும். வேறு தளங்களில் இருந்தோ அல்லது வேறு ஸ்டோர்களில்( சீன நிறுவனங்கள் அனைத்தும் அவர்கள் தனியாக ஆப் ஸ்டோர் உண்டு ) இருந்தோ செய்யவேண்டாம்.

2. Install security apps

உங்கள் மொபைலில் ஒரு நல்ல செக்யூரிட்டி செயலியை ( இலவசமோ / காசு கொடுத்தோ) நிறுவவும். 99 % இவை Malware Apps யை கண்டுபிடித்துவிடும்.

3. Avoid unknown Apps

எல்லா செயலிகளுக்குமே ப்ளே ஸ்டோரில் ரிவியூ மற்றும் ரேட்டிங் உண்டு. எந்த ஒரு செயலியை டவுன்லோடு செய்யும் முன் அதை ஒரு 5 நிமிடம் செலவழித்து படித்து பார்க்கவும். அதிலேயே தெரிந்துவிடும்.

இந்த மால்வேர் ஊடுருவது அதிகமாய் கேமிரா செயலிகள், காசினோ செயலிகள் மற்றும் க்ளீன் அப் செயலிகள் மூலம்தான். எனவே எந்த ஒரு செயலியை டவுன்லோடு செய்யும் முன்னும் இணையத்தில் அந்த செயலியை பற்றி தேடி படிக்கவும்.

இந்த தளத்தில் ரெகுலராக மால்வேர் செயலியை பற்றி செய்தியை போட்டுக்கொண்டே இருப்போம். தொடர்ந்து படிக்கவும்.

About Author