ஜிமெயில் சாட் , மெயில் எல்லாம் தனியாக இருந்தது ( ஆன்ட்ராய்ட்). இப்பொழுது அவற்றை இணைத்து ஒரே செயலி/ஸ்க்ரீனில் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே கூகிள் மீட் ஜிமெயில் ஸ்க்ரீனுடன் இணைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கூகிள் ஹாங் அவுட் / கூகிள் சாட் அவ்வளவு பிரபலமான பலரும் உபயோகப்படுத்தும் மெசேஞ்சர் அல்ல. பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் வேறு சில செயலிகள் உபயோகித்தாலும் இன்னும் இந்த கூகிள் சாட் உபயோகப்படுத்துவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இந்த வசதி (Google Chat (Early Access) ) இன்னும் அனைவருக்கும் டிபால்ட்டாக வராது. செட்டிங்ஸ் சென்று நாம்தான் மாற்ற வேண்டும்.
Warning : Its still in early stages, You can expect some bugs like crashing etc. Activate only if you are comfortable
மொபைலில் இந்த வசதியை பெற
- முதலில் மொபைலில் ( ஆண்ட்ராய்ட் மட்டுமே) ஜிமெயில் செயலி அப்டேட்டாக உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்.
- பின் உங்கள் ஜிமெயில் செயலியை துவக்கவும். அதில் இடது பக்கம் உள்ள ஹேம்பர்கர் மெனுவை க்ளிக் செய்யவும்
- செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது உங்கள் மொபைலில் நீங்கள் இணைத்துவைத்துள்ள ஜிமெயில் ஐடிகள் காணப்படும்
- எந்த ஐடிக்கு இந்த வசதி வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது அதில் “Chat” என்ற ஆப்ஷனின் கீழ் “Google Chat (Early Access)” தேர்வு செய்யவும்.
- உங்களை உறுதி செய்ய சொல்லும். பின் ஸ்க்ரீன் ரீ லோட் ஆகி வரும்பொழுது புதிய மாற்றங்களை காண்பீர்கள்.
இதே வசதியை உங்கள் கணிணியில் பெற
- பிரவுசரில் ஜிமெயில் ஓபன் செய்யவும்.
- வலது மேல் பக்கம் இருக்கும் செட்டிங்ஸ் பட்டன் ( வீல் மாதிரி இருக்கும்) க்ளிக் செய்யவும்
- பின் “load More settings ” கிளிக் செய்யவும்
- வலது பக்கம் கடைசியாக “chat and meet ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது “Google Chat (Early Access)” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து “save changes ” கிளிக் செய்யவும்
கீழே படங்கள்