Tiktok செயலி தடைசெய்யபட்ட பின் அதை போன்று பல செயலிகள் வந்துவிட்டன. ஆனால் ஏற்கனவே இருக்கும் ஒரு செயலி சிறு வீடியோக்கள் tiktok போன்றே போட வழி கொடுத்திருக்கு. Instagram Reels என்பது போட்டோ பகிரும் செயலியான இன்ஸ்டாக்ராம் புதியதாய் கொண்டு வந்திருப்பது. இதற்காக நீங்கள் புதியதாக எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாக்ராம் உபயோகிப்பாளர் எனில் அதிலேயே இந்த வசதி வந்துள்ளது. அப்படி இல்லையெனில் உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்.
Instagram Reels எப்படி உபயோகிப்பது ?
இன்ஸ்டாக்ராம் செயலியின் முகப்பிலிருந்து வலது பக்கம் சுவைப் செய்தால் இன்ஸ்டாகிராம் கேமிரா ஓபன் ஆகும். அதில் கீழே “Reels ” என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் Reels ல் நீங்கள் உங்கள் வீடியோவை பதிவு செய்யலாம். நீங்களே ஆடியோவுடன் வீடியோ பதிவிடலாம் அல்லது அவர்கள் கொடுத்துள்ள ஆடியோவையும் உபயோகித்துக் கொள்ளலாம். வீடியோ ஸெல்ப் டைமர் வைத்து எடுக்கலாம். அதே போல் வீடியோ எடுத்தபின் வீடியோவில் சிறப்பு எபக்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் AR Effects என்ற ஆப்ஷனுக்கு சென்றால் அங்கிருக்கும் வசதிகளை உபயோகித்துக் கொள்ளலாம்.
பகிர்வது
இப்பொழுது இன்ஸ்டாகிராமில் மட்டுமே பகிர இயலும். உங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் அனைவரும் பார்க்கும் வண்ணம் public என்றால் உங்களை பின்தொடர்பவர் மற்றுமின்றி Reels உபயோகிப்பாளர் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுவே உங்கள் ப்ரொபைல் Private எனில் உங்களை தொடர்பவர்கள் மட்டுமே காண இயலும்.
tamiltechportal டெலிகிராம் சேனலில் இணைய
இந்த தளத்தில் விளம்பரம் செய்ய மெயில் அனுப்பவும் sales@cswebservices.in