பொதுவாய் அனைத்து ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் க்ரோம் பிரவுசர் இன்ஸ்டால் ஆகி வரும். இதில்லாமல் சில மாடல்களில் UC பிரவுசர் அல்லது வேறு சில பிரவுசர்கள் இன்ஸ்டால் ஆகி இருக்கலாம். இதில் க்ரோம் பிரவுசர் நீக்க முடியாது. க்ரோம் பிரவுசரில் வசதிகள் எல்லாம் இருந்தாலும் ஒரு பிரச்சனை அது எடுத்துக்கொள்ளும் இடம். சில சமயங்களில் 300 எம் பிக்கு மேல் போகிறது. UC பிரவுசர் போன்றவை சீன செயலிகள். இதற்கு போட்டியாக வந்துள்ளதுதான் ஜியோ பிரவுசர்.
Advantages
- இந்திய பிரவுசர்
- அதிக இடம் எடுத்து கொள்ளாது. எனவே ஸ்டோரேஜ் குறைவாக உள்ள மொபைல்களுக்கு பொருத்தமானது
- வேகமாக உள்ளது
- பல இந்திய மொழிகளில் செய்திகளை தர வல்லது
- முகப்பு பக்கத்தில் உங்களுக்குத் தேவையான செய்திகளை காண்பிக்குமாறு செட் செய்துகொள்ளலாம்
- மற்ற ப்ரவுசர்களை போலவே முகப்பு பக்கத்தில் நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை பின் செய்து வைத்து கொள்ளலாம்.
- இதை இன்ஸ்டால் செய்யும் பொழுது இது எடுத்துக்கொள்ளும் இடம் 6.7 எம்பி மட்டுமே
- இது வரை எந்த பாதுகாப்பு குறைப்பாடும் தெரியவில்லை.
- ஆன்ட்ராய்ட் 5.0 ( லாலிபாப்) வெர்சன் அல்லது அதற்கு மேல் உள்ள வெர்சன்களில் மட்டுமே இயங்கும்.
- இதுவரை உபயோகிப்பாளர் ஸ்டார் ரேட்டிங்கில் 4.7 வந்துள்ளது.
Disadvantages
- பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை ( UI is not good )
- போக போக க்ரோம் அல்லது மற்ற பிரவுசர்கள் போல் அப்டேட் கொடுப்பர்களா என தெரியவில்லை.அதிக அப்டேட்கள் வரும் பொழுது அதிக இடம் எடுக்கும். இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என தெரியவில்லை.
- வேறெந்த பிரச்சனையும் இப்பொழுது தெரியவில்லை. போக போக தான் தெரியவரும்
இப்பொழுதைக்கு தாராளமாக மற்ற குறிப்பாக UC Browser க்கு மாற்றாக உபயோகிக்கலாம். க்ரோம் பிரவுசரின் இடத்தை இது பிடிக்குமா என்றால் இப்பொழுதைக்கு இல்லை என்றே சொல்லவேண்டும்.
சில ஸ்க்ரீன்ஷாட்கள்
இதை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்