“Koo ” வலாம் வாங்க

இந்திய சோஷியல் மீடியா செயலி என்றாலே ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் பேஸ்புக் , ட்விட்டர் போன்றவையின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்திய சோஷியல் மீடியா செயலுக்காக பலரும் காத்திருந்த நிலையில் “elyments ” என்ற செயலி வந்தது. மிகப்பெரிய ஆர்பாட்டத்துடன் வந்தது மிகவும் சாதாரணமாய் போனது. அதனால் எந்த ஒரு சோஷியல் மீடியா செயலி என்றாலும் யோசித்தே மொபைலில் இன்ஸ்டால் செய்கிறேன். இந்நிலையில்தான் Koo என்ற இந்த செயலியை பற்றிய செய்தி கண்ணில் பட்டது.

சமீபத்தில் நடந்த ஆத்மநிர்பார் பாரத் ஆப் சேலஞ்சில் சோஷியல் பிரிவில் வெற்றி பெற்ற செயலிதான் இந்த கூ. இதுவரைக்கும் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டால் செய்துள்ளனர். ட்விட்டர் போன்ற செயலி இது. அதிகபட்சம் 400 வார்த்தைகள் வரை ஒரு “koo” வில் எழுதலாம். இதன் முக்கிய அம்சமே இதில் இந்திய மொழிகளில் மட்டுமே பதிவிட முடியும். ஆங்கிலத்தில் பதிவிட இயலாது. இதன் மூலம் இது உண்மையான சுதேசி செயலி. இதற்காக இந்த செயலியை உருவாக்கியவர்களை பாராட்டுகிறேன்.

இதில் ரிஜிஸ்டர் செய்வது மிக எளிது. உங்கள் மொபைல் நம்பர் மட்டுமே போதும். உங்கள் நம்பரை பதிவு செய்தவுடன் உங்கள் மொபைலுக்கு “OTP ” வரும். இது எளிதாக தோன்றினாலும் இது பிரைவசி பிரச்சனையில் வரும். மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் ஐடி மூலம் பதிவு செய்யும் வசதியை கொண்டு வரவேண்டும். ஏனென்றால் எல்லோரும் மொபைல் எண்ணை எடுத்தவுடன் புதிய செயலியில் பதிவு செய்ய யோசிப்பார்கள்.

கிட்டத்தட்ட ட்விட்டர் போன்றுதான் இருக்கிறது. எனவே பதிவிட எளிதாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் ட்விட்டரில் போஸ்ட் பண்ணிட்டா எடிட் பண்ண முடியாது. இங்கே எடிட் பண்ண இயலும்.இது வரவேற்கத்தக்கது

இன்னொரு விஷயம் இது மனதிற்கு உறுத்தலாய்பட்டது. மொபைல் நம்பர் / ஓ டி பி வெச்ச்சு லாகின் செய்த பிறகு ப்ரொபைல் கம்ப்ளீட் பண்ணாம கெஸ்ட் ஐடியாகவும் தொடர முடிகிறது. இதை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் பெயர் / ஈமெயில் ஐடி கட்டாயமாக்கணும். நாளை பிரச்சனை என்று வந்தால் கண்டுபிடிக்க உதவும்.

இன்று ஒரு செயலியை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம். தொடர்ச்சியாக அப்டேட்கள் தர வேண்டும். டேட்டா சென்டரை பராமரிக்கவேண்டும். வரும் பிரச்சனைகளை கையாள வேண்டும். அதேபோல் போலி செய்திகளை எப்படி கையாளுகிறார்கள் என பார்த்தல் அவசியம். ஏனென்றால் பேஸ்புக் , ட்விட்டர் இதில்தான் தவறிழைக்கின்றன.

இந்திய சமூக ஊடகமாக நீண்ட நாள் நிலைத்து நிற்க வாழ்த்துகள் .

கணிணியில் உபயோகிக்க

ஆன்ட்ராய்ட் மொபைலில் உபயோகிக்க

ஐ போனில் உபயோகிக்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.