Windows 10 20H2 Update

மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஆண்டிற்கு இருமுறை முக்கிய அப்டேட்கள் மூலம் சில மாற்றங்களை செய்யும். இப்பொழுது புதிய அப்டேட்டாக Windows 10 20H2 வந்துள்ளது. இதில் மிக பெரிய மாற்றம் ஸ்டார்ட் மெனு கலர். முன்பு இரண்டு கலர்களில் இருந்தது இப்பொழுது ஒரே கலராக மாற்ற பட்டுள்ளது. நீங்கள் என்ன விண்டோஸ் தீம் உபயோகிக்கறீர்களோ அதற்கேற்றார் போல் கலர் மாறிவிடும் . கீழே ஒரு உதாரணம் பார்க்கவும்.

Windows 10 20H2

Windows 10 20H2

அடுத்த முக்கிய மாற்றம் பிரவுசர். இனி எட்ஜ் பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்ய இயலாது. முன்பு இன்டர்நெட் எஸ்ப்ளோரரை உபயோகிக்கறோமோ இல்லையோ கணிணியில் வைத்திருந்தோம். இனி எட்ஜ் பிரவுசரை அப்படியே வைத்திருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் எக்ஸ்ப்ளோரர் அளவிற்கு எட்ஜ் மோசமில்லை

Windows 10 20H2
Edge Can’t be removed

இந்த இரண்டு மாற்றங்கள்தான் முக்கியமானவை. மற்றவை சின்ன சின்ன மாற்றங்கள். கடைநிலை உபயோகிப்பாளர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அவசியமற்றவை.

எப்படி Windows 10 20H2 அப்டேட் செய்வது ?

முதலில் இது இன்னும் அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும் வரவில்லை. அதேபோல் நீங்கள் பைரேட் பதிவை உபயோகித்தால் அப்டேட் செய்யவேண்டாம்.

ஸ்டார்ட் மெனுவில் இருந்து செட்டிங்ஸ் செல்லவும். அங்கே அப்டேட் & செக்யூரிட்டி ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்பு “windows update ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதன்பின் “check for updates ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்களுக்கு அப்டேட் வந்திருந்தால் காட்டும். அதை இன்ஸ்டால் செய்யவும். இதை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையை தொடரலாம். அது பின்னணியில் அப்டேட்டை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிடும். பின் நீங்கள் எப்பொழுது ரீ ஸ்டார்ட் செய்கிறீர்களோ அப்பொழுது அப்டேட் ஆகி கொள்ளும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.