இந்தியாவில் naukri, shinejobs.com போன்ற இணையதளங்கள் வேலை தேடுவோருக்கும், ஆட்களை தேடுவோருக்கும் மிக உபயோகமானதாக இருந்தது. கூடவே monster.com போன்ற தளங்களும். இப்பொழுது இந்த இணையதளங்களுக்கு போட்டியாக கூகிளும் களம் இறங்கியுள்ளது. Kormo Jobs என்று புதிய செயலியை இதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சோதனை முயற்சியாக வெளிவந்த இந்த செயலி இப்பொழுது அடுத்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வேலை விவரங்களை வெளியிடும் நிறுவனங்கள் கூகிள் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என தெரிகிறது.
நீங்கள் வேலைத் தேடுபவரா ? அப்படி என்றால் கூகிள் ப்ளே ஸ்டோர் செல்லுங்கள் . Kormo Jobs என்று தேடுங்கள். அந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யவும். பின் ஸ்க்ரீனில் வரிசையாக வரும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். உங்கள் டிஜிட்டல் சி வி யை தயார் செய்யுங்கள். முந்தைய வேலை / படிப்பு என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தபின்னால் , நீங்கள் கொடுத்துள்ள விவரங்களின் அடிப்படையில் உங்களுக்கேற்ற வேலைகளை பட்டியலிடும்.
நீங்கள் நிறுவனம் நடத்துபவரா ? உங்களுக்கு தகுதியான ஆட்கள் தேவையா ? நீங்கள் இந்த லிங்கில் பதிவு செய்து கொள்ளுங்கள். கூகிள் உங்களை தொடர்பு கொள்ளும்.